உரைத்துணை
உரைத் துணை (Subtitles) என்பது திரைப்படங்களில் வரும் வசனங்களின் தொகுப்பாக இருக்கும். இது திரைப்படம் திரையிடப்படும்பொழுதே திரையின் கீழ் காட்டப்படும். பெரும்பாலும் வேற்று மொழிப் படங்களுக்கு இணையாக தம் மொழியில் மொழிபெயர்ப்பை உரைத் துணையாக வெளியிடுவர். கதாப்பாத்திரங்கள் பேசுவது எழுத்துவடிவில் காண்பிக்கப்படும். இது காது கேளாதோருக்கும் உதவும். கணினியில் விளையாட்டுகளுக்கும் உரைத் துணைகள் வழங்கப்படுவதுண்டு. அரபுநாடுகள், பிரான்ஸ் போன்ற நாடுகளில் படங்களை வேற்றுமொழி திரைப்படங்களை வெளியிட அவர்களின் மொழிகளில் உரைத்துணை இல்லையென்றால் அங்கு படங்களைத் தணிக்கை செய்து வெளியிட இயலாத சட்ட சிக்கல்களும் உள்ளன.[1]
மேற்கோள்கள் தொகு
- ↑ மோகன் வி.ராமன் (19 சூலை 2016). "தமிழ் சினிமாவை உலக அரங்குக்கு எடுத்துச்செல்லும் ‘பொடி எழுத்துக்கள்’: சப்-டைட்டில் தொழில்நுட்பமும், சுவாரசியங்களும்!". தி இந்து தமிழ். http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article8868843.ece. பார்த்த நாள்: 19 சூலை 2016.