உரைநடை கலந்த செய்யுள்
உரைநடை கலந்த செய்யுள் நூல்களை ‘உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ என்பர். தமிழில் இப்படிச் சில பழைய நூல்கள் உள்ளன.
நிரல்
தொகுகாலம் / நூற்றாண்டு | நூல் | ஆசிரியர் | குறிப்பு |
---|---|---|---|
2 | சிலப்பதிகாரம் | இளங்கோவடிகள் | சிலப்பதிகாரத்தை உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாகச் செய்யவேண்டும் என மணிமேகலை செய்த சாத்தனார் கேட்டுக்கொண்டார் [1] |
700-க்கு முன் | தகடூர் யாத்திரை | – | ஆசிரியமும் வெண்பாவும் உரைநடையும் கலந்த நூல் [2] |
700-க்கு முன் | தமிழ்ப்பாரதம் | – | உரை விரவிய நூல் எனப் பேராசிரியர் குறிப்பிடுகிறார் |
9 | பாரத வெண்பா பாரதம் | பாடிய பெருந்தேவனார் | பழமையான உரைநடைப் பகுதி [2] |
14 | ஜீவசம்போதனை | தேவேந்திர முனிவர் | சமன சமய கருத்துகளைச் சொல்லும் நூல் |
18 | வீரமாறன் கதை | – | கதை |
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, முதல் பாகம், பதிப்பு 2005
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |