உரோமன் யாக்கோபுசன்

உரோமன் ஒசிப்போவிச் யாக்கோபுசன் (Roman Osipovich Jakobson, உருசிய மொழி: Рома́н О́сипович Якобсо́н) (அக்டோபர் 11, 1896 - சூலை 18, 1982) ஓர் உருசிய நாட்டு மொழியிலாளரும் இலக்கிய கருத்தியலாளரும், இலக்கிய கட்டகவியலாளரும் ஆவார்.

உரோமன் யாக்கோபுசன்
பிறப்பு29 செப்தெம்பர் 1896 (in Julian calendar)
மாஸ்கோ
இறப்பு18 சூலை 1982 (அகவை 85)
கேம்பிரிஜ், மாசசூசெட்ஸ்
படித்த இடங்கள்
  • College of Philosophy of the Prague German University
பணிமொழியியலாளர், literary scholar, வரலாற்றாளர், critic, ஆசிரியர்
வேலை வழங்குபவர்
விருதுகள்Guggenheim Fellowship, honorary doctorate of the Masaryk University

இருபதாம் நூற்றாண்டில் மொழியியல் துறையில் வலுவான முதன்மை பெற்ற மொழிக் கட்டகவியல்(structural analysis of language) துறையில் செல்வாக்கு பெற்ற அறிவாளியாக முன்னணியில் இருந்தவர் யாக்கோபுசன். யாக்கோபுசன் சுவிட்சர்லாந்திய மொழியிலாளர் ஃவெர்டினாண்டு டி சாசுரேயின் (Ferdinand de Saussure) கட்டகவியல் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, நிக்கொலாய் துருபெட்ஃசிக்கோயுடன் (Nikolai Trubetzko) சேர்ந்து மொழியியலில் ஒலியனியல் (phonology)என்னும் துறையைத் தொடங்கினார். இதன் அடிப்படையில் சொற்றொடா பகுப்பாய்வியல் (syntax), சொற்பகுப்பாய்வியல் (morphology) ஆகிய துறைகளை அலசினார். இதனை பொருள்கோண்மை இயலுக்கும் (semantics) நீட்டிக்க முயன்றார். இவர் இசுலாவிக் (Slavic) மொழிகளியலிலும் உருசிய மொழியில் வினைச்சொற்கள் வகைப்பாட்டியலிலும் முதன்மையான ஆய்வுகள் செய்துள்ளார்.

சார்லசு சாண்டர்சு பையர்சு (Charles Sanders Peirce) என்பாரின் சூழ்பொருண்மை (semiotics) கொள்கையின் கருத்துகளையும், தொடர்பியல் கருத்தியங்களையும் (communication theory), கட்டுறுத்தியக் கொள்கைகளையும் (சைபர்நெட்டிக்) உள்வாங்கி மொழியில் செய்யுளியல், இசை, திரைப்படம், காண்கலைகள் (visual arts) போன்றவற்றை அலச முற்பட்டார்.

வாழ்க்கையும் பணியும் தொகு

யாக்கோபுசன் உருசியாவில் வசதியான யூதக் குடும்பத்தில் பிறந்தார். சிறு அகவையிலேயே மொழி மீது ஆர்வம் கொண்டார். கீழைமொழிகளுக்கான லாசரேவ் கல்வி நிறுவனத்தில் பயின்றார். பிரகு மாசுக்கோவ் பல்கலைக்கழகத்தில் வரலாற்று-மொழியியல் துறையில் பயின்றார்[1] மாசுக்கோவின் மொழியியல் வட்டாரங்களில் முன்னணியில் இருந்ததால் புதுப்போக்கான கலை இலக்கிய ஆர்வலர்கள் நடுவே நல்லுரவில் இருந்தார். மொழியையும் இலக்கணத்தையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும் என்றும், காலத்தால் நிகழ்ந்த சொற்களின் வரலாற்றையும் வளர்ச்சியையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

1920 இல் உருசியாவில் பெரும் அரசியல் கொந்தளிப்புகள் நிகழ்ந்தன. அப்பொழுது இவர் சோவியத் தூதுவர் குழுவில் ஒருவராக செக்கோசுலாவியாவிற்குச் சென்று அங்கு பிராகில் (Prague)முனைவர் பட்டப் படிப்பை மேற்கொண்டார். அங்கு கல்விவாழ்விலும், கலைவாழ்விலும் செக்கோசுலாவியாவில் பலருடன் நல்ல உறவு ஏற்படுத்திக்கொண்டார். செக் நாட்டின் பல கவிஞர்களுடனும், இலக்கிய ஆசிரியர்களுடனும் நல்லுறவு கொண்டிருந்தார். செக் மொழி செய்யுள்களில் நல்ல தேர்ச்சி பெற்று அவர்கள் நன்மதிப்பைப் பெற்றிருந்தார். 1926 இல் விலெம் மத்தேசியசு (Vilém Mathesius) என்பாருடன் சேர்ந்து மொழியியலில் பிராகு குலம் (Prague school) என்னும் ஒரு குழுவை உருவாக்கினார் (இதில் நிக்கோலாய்ய் துருபெட்ஃசிக்கோய் (Nikolai Trubetzkoi), ரெனெ வெல்லெக் (René Wellek), யான் முகரோவ்சுக்கி (Jan Mukařovský) உறுப்பின்னர்களாக இருந்தனர்.

குறிப்புப் பகிர்வு அல்லது தொடர்பியல் செயற்பாடுகள் தொகு

இடாய்ச்சுலாந்தைச் சேர்ந்த கார்ல் பியூலர் (Karl Bühler) என்பாரின் பகுப்புறுப்பியல் (ஓர்கானொன் மோடல், Organon-Model) கருத்துகளின் அடிப்படையில் யாக்கோபுசன் மொழியின் தொடர்பியலின் இயக்கங்களில் ஆறு கூறுகளை முன்வைத்தார்.

 
[2]

மொழியின் ஆறு செயற்கூறுகள்:

  1. சூழல் சார்வு (referential)
  2. கருத்து, தன்னழகு, கலையுணர்வு (aesthetic)
  3. தன்னுந்தல் (emotive)
  4. செயற்தூண்டல் (conative)
  5. இணக்கக்குசலம் (phatic)
  6. மீமொழி (metalingual)

மேற்கண்ட ஆறு கூறுகளின் எப்பொழுதும் ஒன்று மொழி அல்லது உரையின் வகையைப் பொருத்து முதன்மையானதாக இருக்கும். எடுத்துக்காட்டாக செய்யுள் அல்லது பாட்டியலில் கலையுணர்வு தலைதூக்கி இருக்கும்.

நூல் பட்டியல் தொகு

யாக்கோபுசன் எழுதியது
  • Jakobson R., Remarques sur l'evolution phonologique du russe comparée à celle des autres langues slaves. Prague, 1929
  • Jakobson R., K charakteristike evrazijskogo jazykovogo sojuza. Prague, 1930
  • Jakobson R., Child Language, Aphasia and Phonological Universals, 1941
  • Jakobson R., "Closing Statement: Linguistics and Poetics," in Style in Language (ed. Thomas Sebeok), 1960
  • Jakobson R., Selected Writings (ed. Stephen Rudy). The Hague, Paris, Mouton, in six volumes (1971-1985):
    • I. Phonological Studies, 1971
    • II. Word and Language, 1971
    • III. The Poetry of Grammar and the Grammar of Poetry, 1980
    • IV. Slavic Epic Studies, 1966
    • V. On Verse, Its Masters and Explores, 1978
    • VI. Early Slavic Paths and Crossroads, 1985
  • Jakobson R., Questions de poetique, 1973
  • Jakobson R., Six Lectures of Sound and Meaning, 1978
  • Jakobson R., The Framework of Language, 1980
  • Jakobson R., Halle M., Fundamentals of Language, 1956
  • Jakobson R., Waugh L., The Sound Shape of Language, 1979
  • Jakobson R., Pomorska K., Dialogues, 1983
  • Jakobson R., Verbal Art, Verbal Sign, Verbal Time (ed. Krystyna Pomorska and Stephen Rudy), 1985
யாக்கோபுசனைப் பற்றி எழுதியது
  • Roman Jakobson: Echoes of His Scholarship. Ed. by Daniel Armstrong and Cornelis H. van Schooneveld, 1977
  • Brooke-Rose, C., A Structural Analysis of Pound's 'Usura Canto': Jakobson's Method Extended and Applied to Free Verse,1976
  • Caton, Steve C. "Contributions of Roman Jakobson" Annual Review of Anthropology, vol 16: p. 223-260, 1987.
  • Culler, J., Structuralist Poetics: Structuralism, Linguistics, and the Study of Literature, 1975
  • Groupe µ, Rhétorique générale, 1970. [A General Rhetoric, 1981]
  • Holenstein, E., Roman Jakobson's Approach to Language: Phenomenological Structuralism, Bloomington and London: Indiana University Press, 1975
  • Ihwe, J., Literaturwissenschaft und Linguistik. Ergebnisse und Perspektiven, 1971
  • Kerbrat-Orecchioni, C., L'Enonciation: De la subjectivité dans le langage, 1980
  • Le Guern, M., Sémantique de la metaphore et de la métonymie, 1973
  • Lodge, D., The Modes of Modern Wéiting: Metaphor, Metonymy, and the Typology of Modern Literature, 1977
  • Riffaterre, M., Semiotics of Poetry, 1978
  • Steiner, P., Russian Formalism: A Metapoetics, 1984
  • Todorov, T., Poétique de la prose,1971
  • Waugh, L., Roman Jakobson's Science of Language, 1976

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும் தொகு

  1. Jakobson, Roman (1997). My Futurist Years, pp. 5, 30. trans. Stephen Rudy. Marsilio Publishers. ISBN 1568860498.
  2. Middleton, Richard (1990/2002). Studying Popular Music, p.241. Philadelphia: Open University Press. ISBN 0335152759.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரோமன்_யாக்கோபுசன்&oldid=2733862" இலிருந்து மீள்விக்கப்பட்டது