உரோமுலசும், இரீமசும்
உரோமானியத் தொன்மவியலில் உரோமுலசும், இரீமசும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்த சகோதரர்கள் ஆவர். இவர்களின் கதையானது உரோம் நகரம் நிறுவப்பட்டதற்கு முன் நடந்த நிகழ்வுகளையும், உரோமானிய இராச்சியம் உரோமுலசுவால் நிறுவப்பட்டதையும் குறிப்பிடுகிறது. உரோமானிய இராச்சியத்தை நிறுவுவதற்கு முன் உரோமுலசு தன் உடன் பிறந்த இரீமசைக் கொலை செய்தார். இந்த இரட்டையர்கள் குழந்தைகளாக இருந்த போது, இவர்களது குழந்தைப் பருவத்தில் ஒரு பெண் ஓநாய் இவர்களுக்குப் பாலூட்டிய சித்தரிப்பானது உரோம் நகரத்தின் மற்றும் பண்டைய உரோமின் அடையாளமாகக் குறைந்தது கி. மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து இருந்து வந்துள்ளது. இந்த நிகழ்வுகள் கி. மு. 750ஆம் ஆண்டு வாக்கில் உரோம் நிறுவப்படுவதற்கு முன்னரே நடந்திருந்தாலும் இந்தத் தொன்மக் கதை குறித்து தொடக்கத்தில் எழுதப்பட்ட பதிவானது கி. மு. 3ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து அறியப்படுகிறது.[1][2][3]