உறியடி 2

விஜய் குமார் இயக்கிய 2019 ஆம் ஆண்டைய திரைப்படம்

உறியடி 2 (Uriyadi 2 (English: Breaking pot) என்பது 2019 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் அரசியல், பரபரப்பூட்டும் திரைப்படம் ஆகும்.[2] இதனை விஜய் குமார் என்பவர் எழுதி, இயக்கி, நடித்திருந்தார்.[3] நடிகர் சூர்யாவின் 2டி எண்டெர்டெயிண்ட்மென்ட் நிறுவனம் தயாரித்த[4] இந்தத் திரைப்படத்தில் விஜய் குமார் மற்றும் அறிமுக நாயகி விம்சயா ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தனர். கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். ஏப்ரல் 5, 2019 இல் வெளியாகி நேர்மறையான விமர்சனத்தினைப் பெற்றது[5]. இது 2016 ஆம் ஆண்டில் வெளியான உறியடி திரைப்படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டது ஆகும்.[6]

உறியடி 2
Uriyadi 2
சுவரொட்டி
இயக்கம்விஜய குமார்
தயாரிப்புசூர்யா (நடிகர்)
கதைவிஜய குமார்
இசைகோவிந்த் வசந்தா
நடிப்புவிஜய குமார்
விசுமாயா
ஒளிப்பதிவுபிரவீன் குமார் .என்
படத்தொகுப்புஇலினு எம்
கலையகம்பருமான பொழுதுபோக்கு
விநியோகம்சக்தி திரைத் தொழிற்சாலை
வெளியீடுஏப்ரல் 5, 2019 (2019-04-05)
ஓட்டம்116 நிமிடங்கள்[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தயாரிப்பு

தொகு

விஜய் குமார் இயக்கி, நடித்த இந்தத் திரைப்படத்தினை நடிகர் சூர்யாவின் 2டி எண்டெர்டெயிண்ட்மென்ட் நிறுவனம் தயாரித்தது.படப்பிடிப்பு செப்டம்பர் 20, 2018 இல் தென்காசியில் துவங்கியது.[7] அதே நாளில் படத்தின் முதல் படத்தினை சூர்யா வெளியிட்டார்.[8] இதனை தனது சாவனிர் புரடக்சன் நிறுவனத்தின் மூலம் இணைந்து விஜய் குமார் தயாரித்திருந்தார். தென்காசி மற்றும் குற்றாலம் பகுதிகளைச் சுற்றி பெரும்பான்மையான படப்பிடிப்புகள் நடந்தன.[9] இந்தத் திரைப்படத்தில் பிரவீன் குமார் எனும் ஒளிப்பதிவாளரும் லினு எனும் எடிட்டர் ஆகிய இருவருக்கும் இது முதல் படம் ஆகும்.முதல் பாகத்தின் சண்டைக் காட்சி இயக்குநரான விக்கி இதிலும் சண்டைக் காட்சிகளை இயக்கினார். அசுரவதம் மற்றும் 96 ஆகிய படங்களுக்கு இசயமைத்த கோவிந்த் வசந்தா இதற்கு இசையமைத்தார்.

முதன்மையான படப்பிடிப்புக் காட்சிகள் 36 நாட்களில் நிறைவடைந்தன.[10][11] மார்ச் 23, 2019 இல் படத்தின் இசை வெளியானது. படத்தின் முன்னோட்டத்தினை அதே நாளன்று சூர்யா வெளியிட்டார்.[2][12]

வெளியீடு

தொகு

ஏப்ரல் 5, 2019 இல் இது வெளியானது. துவக்கத்தில் குறைவான திரையரங்குகளில் வெளியானது. ஆனால் இதன் வரவேற்பிற்குப் பின் மேலும் சில திரையரங்குகளில் வெளியானது. தமிழ்நாட்டில் இது வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

விமர்சனம்

தொகு

பல விமர்சகர்கள் இந்தத் திரைப்படம் கடந்தகால மற்றும் நிகழ்கால அரசியல் நிலவரங்களைப் பிரதிபலிப்பதாக உள்ளது எனத் தெரிவித்தனர். கார்ட்டூனிஸ்ட் பாலா, இப்போதுள்ள ஆளும் கட்சிமற்றும் எதிர்க் கட்சி ஆகியவை மற்றும் பல வியாபார நிறுவனங்கள் ஆகியவை எப்படிப்பட்டவை மேலும் அவர்கள் எவ்வாறு சாதி ரீதியாக அரசியல் செய்கின்றனர் என்பதனையும் இந்தப் படத்தினைப் பார்த்து தெரிந்துகொள்ளுமாறு இளைஞர்களுக்குத் தெரிவித்தார்.[13] நக்கீரன் இதழ் போபால் விஷ வாயுத் தாக்குதலின் தீவிரத்தினை இது வெளிப்படுத்துகிறது மேலும் ஸ்டெர்லைட் மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு போன்றவையும் எவ்வாரு நடைபெற்றது என்பதனையும் இது விளக்குவதாகத் தெரிவித்தார்.[14] தற்காலத்தில் தவறாக அரசியல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட தைரியமான படம் எனவும் நிச்சயம் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் எனவும் நியூஸ் 18 தமிழ்நாடு தெரிவித்தது.[15]

பரத்வாஜ் ரங்கராஜன் எனும் விமர்சகர், அரசியல் மற்றும் சினிமாத் தனம் ஆகிய இரண்டும் கலந்து உள்ளது எனத் தெரிவித்து 2.5 புள்ளிகள் வழங்கினார். ஸ்ரீதர் பிள்ளை என்பவர் பார்வையாளர்களைக் கவ்ரும் விதத்தில் காட்சிகள் விறுவிறுப்பாக உள்ளது எனவும் 3.5 புள்ளிகள் வழங்கினார்.[16] மாலை மலர் விஜய் குமார் ஓர் இயக்குநராகவும் நடிகராகவும் தடம் பதித்துள்ளார் எனத் தெரிவித்தது.[16]

மேற்கோள்கள்

தொகு
  1. "Uriyadi 2". British Board of Film Classification. Archived from the original on 26 February 2022. பார்க்கப்பட்ட நாள் 26 February 2022.
  2. 2.0 2.1 "WATCH 'Uriyadi 2' teaser: Vijay Kumar's political action thriller looks promising". தி நியூ இந்தியன் எக்சுபிரசு.
  3. "Vijayakumar next movie Uriyadi2 produced by Suriya". India glitz. 19 Sep 2018.
  4. "Suriya to produce Uriyadi2". Moviecrow. 19 Sep 2018.
  5. "'Uriyadi 2' teaser: The film is a political thriller with firebrand dialogues and actions". Times of India. 23 Mar 2019.
  6. "'Uriyadi 2' is a spiritual sequel to 'Uriyadi': Vijay Kumar". The Hindu. 4 Apr 2019.
  7. "Uriyadi 2 rolls out from today". Times day of India. 20 Sep 2018.
  8. "Uriyadi 2 shooting starts". Cinema Vikatan. 20 Sep 2018.
  9. "Suriya officially announced Uriyadi2 starts". Malaimalar. 20 Sep 2018.
  10. "'Uriyadi 2' shooting wrapped in 36 days". Times of India. 31 Oct 2018.
  11. "'Uriyadi-2' shoot wrapped in 36 days!". Sify. 31 Oct 2018.
  12. "Uriyadi 2 teaser promises an action packed political thriller". Hindustan Times. 23 Mar 2019.
  13. "குறி தப்பாத உறியடி!". Lines Media. 8 Apr 2019. Archived from the original on 10 அக்டோபர் 2019. பார்க்கப்பட்ட நாள் 10 அக்டோபர் 2019.
  14. "காங்கிரஸையும் பாஜகவையும் ஒரே அடியாக அடித்த உறியடி!". Nakkheeran. 12 Apr 2019.
  15. "Uriyadi 2 has drawn all the political attention". News 18 Tamil Nadu. 10 Apr 2019.
  16. 16.0 16.1 "Uriyadi 2 movie review: Vijay Kumar follows up his impressive debut with a sharp take on Sterlite protests". Firstpost. 5 Apr 2019.     
"https://ta.wikipedia.org/w/index.php?title=உறியடி_2&oldid=4120219" இலிருந்து மீள்விக்கப்பட்டது