உறுதிச் சமநிலை
உறுதிச் சமநிலை (stable equilibrium) என்பது நிலையாக இருக்கும் ஒரு பொருளை சிறிது அசைத்து விட்டால் அது மறுபடியும் தனது முதல் நிலையை வந்து அடையும் நிலை ஆகும். வாய்ப் பக்கத்தில் நிற்கும் புனல் இதற்கு உதாரணமாகும். மாறாக ஒரு புனலை அதன் தண்டில் நிற்பதாகக்கொள்வோம். அதனை சிறிது அசைத்தால் அது தனது முதல் நிலைக்கு வராது. அது தூர விலகிச் செல்லும். இது உறுதியிலாச் சமநிலை (unstable equilibrium) ஆகும். பக்கவாட்டில் இருக்கும் ஒரு புனலை அசைத்துவிட்டால் அது தனது பழைய நிலைக்கும் வராமல் அப்பாலும் செல்லாமல் புதிய ஒரு நிலையில் வந்து நிற்கும். இப்படிப்பட்ட நிலை, நடுநிலைச் சமநிலை (neutral eqilibrium) எனப்படும்.