உறுதிச் சான்று (சட்டம்)
நீதிமன்றப் பயன்பாடுகளில் உறுதிச் சான்று (en: Affidavit) என்பது இந்தியச் சாட்சிச் சட்டம் பிரிவு 70 ன்படி ஒரு ஆவணத்தை எழுதுபவர் அதனைத் தாம் எழுதியதாக அல்லது தான் சொல்லச் சொல்ல வேறு ஒரு நபரால் எழுத அல்லது தட்டச்சு செய்யப்பட்டு தன்னால் சரிபார்க்கப்பட்டது என செய்யும் ஏற்புரை. அது அவரால் எழுதப்பட்டது என்பதற்கு போதுமான நிரூபணம் ஆகும்.இது போல் தன்னுடைய வழக்கில் தானே வாதிடும் ஒரு நபருக்கு இந்த உறுதிச் சான்று தேவையில்லை.