உறையூர் மருத்துவன் தாமோதரனார்

உறையூர் மருத்துவன் தாமோதரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கத்தொகை நூல்களில் இவரது பாடல்கள் 5 உள்ளன.அவை:

  • அகநானூறு 133, 257,
  • புறநானூறு 60[1], 170, 321

இவற்றில் இவர் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன், பிட்டங்கொற்றன் ஆகியோரைப் பாடியுள்ளார்.

இருபிறப்பாளன் (புறம் 170) தொகு

உடுக்கு அடிக்கும் வேலனை இவர் 'இருபிறப்பாளன்' என்று குறிப்பிடுகிறார். எளிய மனிதனாக உள்ளபோது அவனுக்கு உள்ளது ஒரு பிறப்பு. வீட்டு விழாவில் அகத்திணைப் பாடல்களில் தலைவிக்கு முருகயரும்போது மற்றொரு பிறப்பு. இப்படி ஒருவனே இரு பிறப்பாளனாக மாறுகிறான்.

பார்ப்பாரை இருபிறப்பாளன் என்பது வழக்கம். பூணூல் அணிவதற்கு முன் ஒரு பிறப்பு. பூணூல் அணிந்த பின் மறுபிறப்பு.

பாடல் சொல்லும் செய்திகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

  1. உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடல் புறநானூறு 60