உலகக் கட்டிடக்கலை நாள்
உலகக் கட்டிடக்கலை நாள் (World Architecture Day) ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தின் முதலாவது திங்கட்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. சர்வதேச கட்டிடக் கலையினர் ஒன்றியம் 2005 ஆம் ஆண்டில் உலக கட்டிடக்கலை தினத்தை அறிவித்து கொண்டாடி வருகிறது.[1] நமது வருங்கால நகரங்களையும் குடியிருப்புகளையும் வடிவமைப்பதில் உள்ள கூட்டுப் பொறுப்பை உலகிற்கு எடுத்துணர்த்தும் பொருட்டு இந்நாள் கொண்டாடப்படுகிறது.[1]
கட்டிடக்கலை என்பது கட்டிடங்கள் வடிவமைப்புச் செய்வதற்கான கலையும், அறிவியலும் ஆகும். கட்டிடக் கலையானது கணிதம், அறிவியல், கலை, தொழில்நுட்பம், சமூக அறிவியல், அரசியல், வரலாறு, தத்துவம் போன்றவற்றுடன் தொடர்புடைய ஒரு பல்துறைக்களமாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Happy World Architecture Day!". ArchDaily. பார்க்கப்பட்ட நாள் 3 அக்டோபர் 2016.