உலகத் தமிழ்க் களஞ்சியம்

தமிழ், தமிழர், தமிழ்நாடு பறிய ஒரு தமிழ்க் கலைக்களஞ்சியம்

உலகத் தமிழ்க் களஞ்சியம் என்பது தமிழில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்,தமிழர்,தமிழ்நாடு பறிய ஒரு தமிழ்க் கலைக்களஞ்சியம் ஆகும்.உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் பங்களிப்பு இதில் இடம் பெற்றுள்ளது. இக்கலைக்களஞ்சியம் மூன்று தொகுதிகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. இத்தொகுதிகள் 10,000 க்கு மேற்பட்ட செய்திகளுடன் ஏறத்தாழ 2,141 பக்கங்களைக் கொண்டுள்ளன.

4.சிறப்பு 5.வெளி இணைப்புகள்

பதிப்பு

தொகு

இந்தக் கலைக்களஞ்சியமானது மலேசியாவின், கோலாலம்பூரில் உள்ள முன்னணிப் பதிப்பகமான உமா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் களஞ்சியத்தின் தொகுப்பாசிரியராகப் பேராசிரியர் இ.ஜே. சுந்தர் இதன் முதன்மைப் பங்களிப்பை வழங்கியுள்ளார்.இதன் சீராளராக நலங்கிள்ளி பணியாற்றியுள்ளார்.பேராசிரியர், முனைவர் க. ப. அறவாணன் இத் தொகுப்புக்கு அறிவுரைஞராகச் செயல்பட்டுள்ளனர்.

வரலாறு

தொகு

இக் களஞ்சியம் முனைவர் இ.ஜே.சுந்தர் அவர்களின் கனவுத்திட்டமாகும்.1996-ஆம் ஆண்டு உலகத் தமிழர் தன்முனைப்பு இயக்கத்தில் (INTAMM) அவர் ஒருங்கிணைப்பாளராக இருந்தபோது இணையதளத்தில் இத்தகைய ஒரு முயற்சியில் ஈடுபட்டார்.ஆனால் இவ்வியக்கம் தொடரமுடியாமையால் மலேசிய நண்பன்(மலேசியத் தமிழ் நாளிதழ்) தலைமை ஆசிரியர் ஆதி குமணனுடன் இணைந்து இத் திட்டத்தைச் செயல்படுத்த 2014 இல் முனைந்த நிலையில் எதிர்பாராவிதமாக ஆதி.குமணன் இயற்கை எய்தினார்.இந் நிலையில் இத் திட்டத்தை மலேசிய உமா பதிப்பக உரிமையாளர் திரு டத்தோ சோதிநாதன் அவர்கள் ஏற்று தாம் வெளியிடத் தோள் கொடுத்தார்.இத் திட்டத்திற்கு அறிவுரைஞராக முனைவர் அறவாணன் அவர்கள் முன்வந்தார்.2006 இல் தமிழ்,தமிழர்,தமிழ்நாடு தொடர்பான அனைத்துத் தகவக்லளையும் உலக அளவில் திரட்ட குழு அமைக்கப்பட்டு திட்டம் சென்னையில் தொடங்கிவைக்கப்பட்டது.தமிழறிஞர்களோடு பல்துறை வல்லுநட்களும் இணைந்து 12 ஆண்டுகள் உழைப்பில் உருவான இக் களஞ்சியம் மலேசியாவில் அச்சிடப்பட்டு 2018 திசம்பரில் வெளிவந்தது.சென்னைப் புத்தகக் காட்சி பேரரங்கில் இந் நூலின் இந்திய மற்றும் இலங்கை மொத்த விற்பனையாளரான ரிதம் பதிப்பாளரின் ஏற்பாட்டில் 09-01-2019 அன்று அறிமுக விழா கண்டது.

உள்ளடக்கம்

தொகு

இந்தக் களஞ்சியத்தில் தமிழ் தமிழர்,தமிழ்நாடு தொடர்பான 16,000 த்துக்கும் மேற்பட்ட செய்திகள் 2141 பக்கங்களில் இடம்பெற்றுள்ளன. மேலும் உலகத்தமிழ்க்களஞ்சியம் என்ற பெயருக்கேற்ப உலகநாடுகள் பலவற்றில் வாழும் தமிழர்கள் பற்றியும் அங்குள்ள தமிழ் அமைப்புகள்,தமிழ்க் கல்விநிலையங்கள்,ஆலயங்கள் முதலியன பற்றியும் உள்ள அரிய செய்திகளை இதில் காணலாம். தமிழகத்தில் உள்ள 600 ஊர்களைப் பற்றி,தமிழகத்தில் பாயும் 93 ஆறுகளைப் பற்றி,800 தமிழ் இதழ்களைப் பற்றி,720 தமிழகத் தாவரங்களைப் பற்றி,230 விலங்குகள்,பறவைகள் ஆகியன பற்றி,1000த்துக்கும் மேற்பட்ட பலதுறைப் பெருமக்களைப் பற்றி அரிய செய்திகளை இக் களஞ்சியம் அள்ளித் தருகிறது.தமிழ் இலக்கணம் பற்றி 904 தலைப்புகளும்,அயலகத்தமிழர் பற்றி 720 தலைப்புகளும், தமிழ் இலக்கியம் பற்றி 760 தலைப்புகளும்,தொழில் நிலையங்கள் பற்றி 145 தலைப்புகளும் இதில் இடம்பெற்றுள்ளன. தமிழ்ப் பண்பாடு, கலைகள், இலக்கியங்கள், ஆளுமைகள் ஆகியவற்றுக்கு முதன்மை கொடுக்கப்பட்டுள்ளது. இதில் அகராதிகள், அமைப்புகள், இலக்கணம், தாவரவியல் என்று 39 பிரிவுகளில் 16,000-க்கும் மேற்பட்ட செய்திகள் உள்ளன. இதில் 900 இலக்கணக் குறிப்புகளும், காளிதாஸ் தொடங்கி 2016 வரையில் வெளிவந்த 4000 திரைப்படங்களின் பட்டியலும், அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் பற்றியும் உலகம் முழுவதும் உள்ள தமிழ்ச் சங்கங்களைப் பற்றிய குறிப்புகளும், 108 திவ்விய தேசங்கள், 274 பாடல்பெற்ற சைவத் தலங்கள் ஆகியவற்றைப் பற்றிய தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன. மேலும் 200 சிற்பங்களைப் பற்றிய தகவல்கள் இக்களஞ்சியத்தில் உள்ளன.

சிறப்பு

தொகு

தமிழகத்திற்கு வெளியே மலேசியா,சிங்கப்பூர்,அமெரிக்கா,கனடா முதலிய நாடுகளில் உள்ள அத்தனை ஆலயங்களையும்,அங்குள்ள தமிழ்ப்பெருமக்களையும் பற்றிய செய்திகளையும் திரட்டித் தந்துள்ளது இக் களஞ்சியம். அனைத்துச் செய்திகளும் அகர வரிசையில் இடம் பெற்றுள்ளன.எனினும் அகராதி,அமைப்பு,ஆடை,அணிகலன்கள்,இசுலாம்,இசை,இதழியல்,இலங்கைத் தமிழர்,இந்து-சமண-பௌத்தச் சமயங்கள்,இலக்கணம்,இலக்கியம்,உணர்வு,ஊர்கள்,கணினி,கல்வி,கிறித்துவம்,சட்டம்,சித்தம்,சிற்பம்,ஓவியம்,சுற்றுலா,சோதிடம்,தாவரவியல்,திரை,தொல்லியல்,தொழில்நிலையங்கள்,நடனம்,நாட்டுப்புறவியல்,நாடகம்,நூலகம்,பழக்கவழக்கங்கள்,நம்பிக்கைகள்,புவியியல்,பெரு மக்கள்,மருத்துவம்,வரலாறு,விலங்கியல்,விழா,விளையாட்டு வேளாண்மை ஆகிய 39 தலைப்புகள் வழியாகவும் செய்திகளைத் தேடும் வசதி இந் நூலில் உள்ளது.சலிப்பூட்டும் நீண்ட கட்டுரைகளாக இல்லாமல் செய்திகளின் தேவைக்கேற்ப இரண்டு வரியிலிருந்து ஒரு பக்கம் வரை செய்திகள் இரம்பெற்ருள்ளன.செய்திகளின் நடை எளிய,இனிய தமிழில் அமைந்துள்ளதோடு செய்திகளை விளக்க 560 படங்கள் இடம்பெற்றுள்ளன.மூன்று தொகுதிகளாக இக் களஞ்சியம் அமைந்துள்ளது. மருத்துவர்கள் டாக்டர் தெய்வநாயகம், டாக்டர் கு.சிவராமன்,பேராசிரியர்கள் கா.பட்டாபிராமன்,டாக்டர் தெ.ஞானசுந்தரம், டாக்டர் மறைமலை இலக்குவனார்,இதழாளர்கள் திரு.லேனா தமிழ்வாணன்,திரு அ.மா.சாமி,நாட்டாரியல் அறிஞர் டாக்டர் காவ்யா சண்முகசுந்தரம், வரலாற்ரறிஞர் டாக்டர் கலைக்கோவன்,பறவையியல் அறிஞர் க.ரத்னம் முதலிய 50 க்கு மேற்பட்ட பல்துறை அறிஞர்கள் இதில் பங்களிப்பு வழங்கியுள்ளனர்.இவர்களில் மலேசியத் தமிழறிஞர் டாக்டர் முரசு நெடுமாறன்,அமெரிக்கத் தமிழ்ச்சான்றோர் அழகப்பா ராம்மோகன்,ஈழத்துத் தமிழறிஞர் டாக்டர் வேலுப்பிள்ளை,கனடா தமிழறிஞர் இராசரத்தினம் முதலிய வெளிநாட்டு அறிஞர்களும் அடங்குவர். சிறப்புசசமயச்சார்பற்று,அரசியல் சார்பற்று இந்தக் கலைக்களஞ்சியம் உருவாக்கப்பட்டுள்ளது.நடுவுநிலைமையுடன் ஆளுமைகளைப் பற்றிய குறிப்புகள் அமைந்துள்ளன.அவற்றுள் அவர்களது சாதனைகளுடன் அவர்கள் எதிர்கொண்ட விமர்சனங்களும் தவறாது குறிக்கப்பட்டுள்ளன.எந்தவொரு தகவலை எழுதும்போதும் அதை எழுதியவருக்கும் அவரது கொள்கைச்சார்புக்கும் எவ்வித முற்சாய்வும் வழங்கப்படாமல் பொதுத்தன்மை பேணப்பட்டுள்ளது.இத்தகைய நடுநிலையான அணுகுமுறை இக் களஞ்சியத்திற்கு மேலும் சிறப்புச் சேர்க்கின்றது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பற்றியும் உலகம் முழுமுழுவதும் உள்ள தமிழ்ச்சங்கங்கள் பற்றியும் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.சிற்பக்கலைக்குச் சிறப்பிடம் வழங்கப்பட்டு சிற்பங்களைப் பற்றிய குறிப்புகள் மிகக் கவனத்துடன் அளிக்கப்பெற்றுள்ளளொன்பது தலை இராவணன் சிற்பம்,கதிராமங்கலம் துர்க்கை சிற்பம் முதலிய இருநூறு சிற்பங்களைப் பற்றிய தகவல்கள் இக் களஞ்சியத்தில் காணப்படுகின்அன. இந்தியாவைச் சேர்ந்த சமயங்கள் என்ற அடிப்படையில் இந்து,சமணம்,பௌத்தம் எல்லாம் ஒரே பிரிவின்கீழ் பொதுத்தலைப்பாகவகைப்படுத்தப்பட்டுள்ளன.கிறித்தவ் மற்றும் இஸ்லாமிய சமயங்கள் பற்றிய தகவல்கள் தனிப்பிரிவுகளாக இடம்பெற்றுள்ளன.இஸ்லாமிய,கிறித்துவ ஆளுமைகள் குறித்தும் இஸ்லாமிய,கிறித்துவ தமிழ் இலக்கியப் படைப்புகள் குறித்தும் மிக விரிவான தகவல்கள் இக் களஞ்சியத்தில் இடம்பெற்றுள்ளன.இக் களஞ்சியம் ஆய்வாளர்கல்,மாணவர்கள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்திக்கொள்லும் வகையில் அமைந்துள்ளது.இதனைச் சுற்றுலா வழிகாட்டியாகவும் போட்டித்தேர்வுகளுக்குத் துணைநூலாகவும் கொள்ள்லாம்.108 திவ்விய தேசங்கள் பாடல் பெற்ற 274 சைவத்தலங்கள் ஆகியன பற்றிய தகவல்கள் ஆன்மிகச்சுற்றுலா மேற்கொள்வார்க்குப் பயனளிக்கும் வண்ணம் வழங்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு வழிபாட்டுத்தலமும் எங்கே இருக்கிறது,அதன் அருகில் இருக்கும் நகரங்கள் யாவை,அண்மையில் உௐௐஅ தொடர்வண்டிநிலையத்திலிருந்து எவ்வளவு தொலைவு ஆகிய தகவல்களூம் பயணத்திற்கு வழிகாட்டியாக வழங்கப்பட்டுள்ளன.அதனைப் போன்றே வட்டத்தலைநகரங்களைப் பற்றிய தகவல்களூம் சிறப்புறத் தொகுத்துரைக்கப்பட்டுள்ளன.வட்டத்தலைநகரங்கள் ஒவ்வொன்றிலும் 2011-ஆம் ஆண்டடின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை எவ்வளவு,ஆண்-பெண் எண்ணிக்கை எவ்வளவு என்ற விவரங்களையும் தொகுத்தளித்துள்ளனர்.அண்மைத் தொடர்வண்டிநிலைய விவரத்தையும் வழங்கியுள்ளனர்.இன்றியமையா வரலாற்று நிகழ்வுகள் தவறாமல் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.1937,1952,1965 என்று இந்தி எதிர்ப்பின் மூன்று காலகட்டங்களைப் பற்றியும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.கீழவெண்மணி,தாமிரபரணிப் படுகொலை,தைப்புரட்சி,கூடங்குளம் எதிர்ப்புப் போர் வரைக்கும் தமிழ்நாட்டில் தமிழர்கள் நடத்திய அனைத்துப் போராட்டங்களும் வரலாற்றுப்பதிவுகளாக இக் களஞ்சியத்தில் இடம்பெற்றுள்ளன. சுருங்கச் சொன்னால் பல்வேறு தரவுத்தளங்களில் தேடித் தெரிந்துகொள்ளவேண்டிய பல்வேரு தகவல்களை ஒரே இடத்தில்,இக் களஞ்சியத்தில்,எளிதில் அறிந்துகொள்ளும் அரிய வாய்ப்பு னிக் களஞ்சியத்தின் வாசகர்களுக்கு அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு

செல்வ. புவியரசன்(2019 சனவரி11)-" அரசு செய்யவேண்டிய வேலைஅயை நாங்கள் செய்திருக்கிறோம்"-நலங்கிள்ளி பேட்டி"-செவ்வி-இந்து தமிழ்--பார்த்த நாள்12 சனவரி 2019

வெளி இணைப்புகள்(தொகு)

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலகத்_தமிழ்க்_களஞ்சியம்&oldid=2761375" இலிருந்து மீள்விக்கப்பட்டது