உலகத் தாய்ப்பாலூட்டல் வாரம்

உலகத் தாய்ப்பாலூட்டல் வாரம் (World Breastfeeding Week, WBW) தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் ஆகத்து 1 முதல் ஆகத்து 7 வரை 120 இற்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படுகிறது. 2010 ஆம் ஆண்டில் 79 நாடுகளில் 488 அமைப்புகள், 406,620 தனியார்கள் கலந்துகொண்ட 540 நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.[1]

உலகத் தாய்ப்பாலூட்டல் வாரம்
World Breastfeeding Week
தொடக்கம்1 ஆகத்து
முடிவு7 ஆகத்து
காலப்பகுதிஆண்டு தோறும்
அமைவிடம்(கள்)உலகளாவியது
இயக்கத்திலுள்ள ஆண்டுகள்33
துவக்கம்1991
பங்கேற்பவர்கள்அரசுகள், அமைப்புகள், தனியார்
வலைத்தளம்
worldbreastfeedingweek.org
தாய்ப்பாலூட்டலுக்கு ஆதரவாக

தாய்ப்பாலூட்டலுக்கான உலகக் கூட்டமைப்பு, உலக சுகாதார அமைப்பு, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் ஆகிய நிறுவனங்களின் உதவியுடன், தாய்ப்பாலூட்டலை ஊக்குவிக்கும் முகமாக 1991 ஆம் ஆண்டு முதல் இவ்வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "WBW pledges". Archived from the original on 2010-11-29. பார்க்கப்பட்ட நாள் 2015-07-29.

வெளி இணைப்புகள்

தொகு