உலகமுதற்காப்பியங்கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
காப்பியங்கள் உலகின் பலமொழிகளில் உள்ளதொரு இலக்கிய வகைமையாகும். இந்த இலக்கியவடிவம் தமிழமொழியில் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. தமிழின் முதற்காப்பியமாகக் கருதப்படுவது இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் ஆகும். இதைப்போன்று பிற உலகமொழிகளில் உள்ள காப்பியங்கள் பற்றி இங்குக் காணலாம்.
உலக முதற்காப்பியங்களின் பட்டியல்
தொகு1.மொழி:பாபிலோனியம்/ சுமேரியம்
தொகு- காப்பியத்தின் பெயர்:கில்கமேசம்
- ஆசிரியன் பெயர்: தெரியவில்லை.
- காலம்/நூற்றாண்டு: கி மு 24 ஆம் நூற்றாண்டு.
- தலைவன்: ;கில்கமேசன்
- ஆணா/பெண்ணா: ஆண்
- குடிமரபு: அரசன்
- காப்பிய மையக்கருத்து: போர்வீரம்
2.மொழி: கிரேக்கம்
தொகு- காப்பியத்தின் பெயர்: இலியதம்
- ஆசிரியன் பெயர்: ஓமர்
- காலம்: கி மு 8 ஆம் நூற்றாண்டு.
- தலைவன்: அக்கிலிசு
- ஆணா/பெண்ணா: ஆண்
- குடிமரபு: அரசன்
- காப்பிய மையக்கருத்து: போர்வீரம்
3.மொழி: வடமொழி (சமக்கிருதம்)
தொகு- காப்பியத்தின் பெயர்: இராமாயணம்
- ஆசிரியன் பெயர்: வால்மீகி
- காலம்: கி மு 5 ஆம் நூற்றாண்டு
- தலைவன்: இராமன்
- ஆணா/பெண்ணா: ஆண்
- குடிமரபு: அரசன்
- காப்பிய மையக்கருத்து: அறம்தழுவிய போர்வீரம்
4.மொழி: இலத்தீன்
தொகு- காப்பியத்தின் பெயர்: ஈனிட்
- ஆசிரியன் பெயர்: வெர்சில்
- காலம்: கி மு 1 ஆம் நூற்றாண்டு
- தலைவன்: ஈனியசு
- ஆணா/பெண்ணா: ஆண்
- குடிமரபு: அரசன்
- காப்பிய மையக்கருத்து: போர்வீரம்/ ஒழுக்கம்
5.மொழி: தமிழ்
தொகு- காப்பியத்தின் பெயர்: சிலப்பதிகாரம்
- ஆசிரியர் பெயர்: இளங்கோவடிகள்
- காலம்: கி பி 2 ஆம் நூற்றாண்டு
- தலைமை: கண்ணகி
- ஆணா/பெண்ணா: பெண்
- குடிமரபு: வணிகர்
- காப்பிய மையக்கருத்து: ஒழுக்கவீரம்/கற்பு.
6.மொழி: பாரசீகம்
தொகு- காப்பியத்தின் பெயர்: சாநாமா
- ஆசிரியன் பெயர்: பிர்தௌசி
- காலம்: கிபி. 11 ஆம் நூற்றாண்டு
- தலைமை: சா இன்சா
- ஆணா/பெண்ணா: ஆண்
- குடிமரபு: அரசன்
- காப்பிய மையக்கருத்து: போர்வீரம்
7.மொழி: செருமானியம்
தொகு- காப்பியத்தின் பெயர்: நிபலிங்கன்லைடு
- ஆசிரியன்பெயர்: தெரியவில்லை
- காலம்: கி பி.12 ஆம் நூற்றாண்டு
- தலைமை: சீசுபிரிட்
- ஆணா/பெண்ணா: ஆண்
- குடிமரபு: அரசன்
- காப்பிய மையக்கருத்து: போர்வீரம்
8.மொழி:இத்தாலியம்
தொகு- காப்பியத்தின் பெயர்: செருசலத்தின் மீட்சி
- ஆசிரியன் பெயர்: ;டேசோ
- காலம்: கிபி.16 ஆம் நூற்றாண்டு
- தலைமை: காட்பிரி முதலானோர்.
- ஆணா/பெண்ணா: ஆண்
- குடிமரபு: சிற்றரசர்கள்
- காப்பிய மையக்கருத்து: ஒழுக்கம்/ ஆன்மீகவீரம்
9.மொழி:போர்த்துகீசியம்
தொகு- காப்பியத்தின் பெயர்: ஆசு லுசியதசு
- ஆசிரியன் பெயர்: கேமோயன்சு
- காலம்: கி பி.16 ஆம் நூற்றாண்டு
- தலைமை: வாசுகோடகாமா
- ஆணா/பெண்ணா: ஆண்
- குடிமரபு: குடிமகன்
- காப்பிய மையக்கருத்து: ஒழுக்கம்/ ஆன்மீகவீரம்
10. மொழி: ஆங்கிலம்
தொகு- காப்பியத்தின் பெயர்: வனதேவ ராணி
- ஆசிரியன் பெயர்: எட்மண்ட் பென்சர்
- காலம்: கி பி. 16 ஆம் நூற்றாண்டு
- தலைமை: தானை மறவர்கள்
- ஆணா/பெண்ணா: ஆண், பெண்
- குடிமரபு: சிற்றரசர்கள்
- காப்பிய மையக்கருத்து: ஒழுக்கம்/ஆன்மீகவீரம்.
உசாத்துணைகள்
தொகு- மணவாளன், அ.அ., இலக்கிய ஒப்பாய்வுக்களங்கள், 2005.