உலகைத் தாங்கும் ஆமை
உலக ஆமை, இதனை உலகைத் தாங்கும் ஆமை என்றும் அழைக்கப்படுகிறது. இந்து தொன்மவியல், சீனத் தொன்மவியல் மற்றும் அமெரிக்கப் பழங்குடியினரின் புராணங்களில் உலகைத் தாங்கும் ஆமைக் குறித்து பேசப்பட்டுள்ளது.
இந்து புராணங்களில் உலக ஆமையை அகுபரா என்ரும் சில சமயங்களில் சுக்வா என்று அழைக்கப்படுகிறது.. இந்த உலகம் எட்டு யானைகள் மீது இருப்பதாகவும், யானைகள் உலக ஆமையின் மீது இருப்பதாகவும் கூறப்படுகிறது.