உலக ஈமோஃபீலியா கூட்டமைப்பு
உலக ஈமோஃபீலியா கூட்டமைப்பு (World Federation of Hemophilia - WFH) என்பது ஒரு சர்வதேச இலாப நோக்கற்ற அமைப்பாகும். இது ஈமோஃஃபீலியா (ஹீமோபிலியா என்றும் உச்சரிக்கப்படுகிறது) மற்றும் பிற மரபணு இரத்தபோக்கு கோளாறுகள் உள்ளவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தத் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தி மேம்பட்ட மருத்துவ சிகிச்சைபெற அறிவுரைகளை வழங்குகிறது.[2] உலகில் இரத்தபோக்கு கோளாறுகள் உள்ள 75% மக்களுக்கு இது தெரிவதில்லை மேலும் இதில் கவனம் செலுத்துவதும் இல்லை.[3]
உருவாக்கம் | 1963 |
---|---|
நிறுவனர் | பிராங்க் செனாபெல் |
தலைமையகம் | |
சேவைப் பகுதி | உலகம் முழுவதும் |
முறை | சிகிச்சை, உதவி, கல்வி |
உறுப்பினர் | 127 உறுப்பினர் அமைப்புகள்[1] |
முக்கிய நபர்கள் | தலைவர் அலைன் வெயில்[1] |
செயல்நோக்கம் | உலகிலுள்ள ஈமோஃஃபீலியா மற்றும் பிற மரபணு இரத்தபோக்கு கோளாறுகள் உள்ளவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துதலும் பாதுகாத்தலும்[1] |
வலைத்தளம் | http://www.wfh.org/ |
இக்கூட்டமைப்பானது 1963ஆம் ஆண்டு பிராங்க் செனாபெல் என்பவரால் நிறுவப்பட்டது. அதன் தலைமையகம் கனடாவின் மொண்ட்ரியாலில் உள்ளது. இது 113 நாடுகளில் அமைப்புகளையும் உலக சுகாதார அமைப்பின் அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தையும் கொண்டுள்ளது. இந்த அமைப்பின் தற்போதைய தலைவர் அலைன் வெயில்.[4]
உலக ஈமோஃபீலியா தினம்
தொகுஉலக ஈமோஃபீலியா தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 17 அன்று நடத்தப்படுகிறது. ஈமோஃபீலியா மற்றும் பிற இரத்தபோக்கு கோளாறுகளால் பாதிப்பிற்கு உள்ளானவர்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நாள் இது. இந்நாள் நிதி திரட்டுவதற்கும் உலக ஈமோஃபீலியா கூட்டமைப்பிற்காகத் தன்னார்வலர்களை ஈர்ப்பதற்கும் உதவுகிறது. இந்நாள் 1989ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. ஃபிராங்க் சனாபலின் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 17 தேர்வு செய்யப்பட்டது.[5]
ஆண்டு கருப்பொருள்
தொகு- 2021: “மாற்றங்களை ஏற்றுக்கொண்டு, புதிய உலகில் நிலைத்த கவனிப்பு”
- 2020: ”மெய் நிகர் பங்கெடுப்புடும் பாதுகாப்பாக இருத்தலும்”
- 2019: “அடையாளம்காணல், சென்றடைதல்”
- 2018: "அறிவைப் பகிர்வது எங்களை வலிமையாக்குகிறது"
- 2017: "அவர்களின் குரல்களைக் கேளுங்கள்"
- 2016: "அனைவருக்கும் சிகிச்சை, அனைவரின் பார்வை"
- 2010: "இரத்தபோக்கு கோளாறுகளின் பல முகங்கள் - அனைவருக்கும் சிகிச்சையை அடைய யுனைடெட்" [6]
- 2009: "ஒன்றாக, நாங்கள் கவனித்துக்கொள்கிறோம்" [7]
- 2008: "கவுண்ட் மீ இன்" [8]
- 2007: "உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துங்கள்!" [9]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "World Federation of Hemophilia". Archived from the original on 2012-06-03. பார்க்கப்பட்ட நாள் 2012-08-16.
- ↑ "Vision and Mission - World Federation of Hemophilia". www.wfh.org. பார்க்கப்பட்ட நாள் 2020-04-16.
- ↑ "Fast Facts". National Hemophilia Foundation (in ஆங்கிலம்). 2014-03-04. பார்க்கப்பட்ட நாள் 2020-04-16.
- ↑ "History - World Federation of Hemophilia". www.wfh.org. பார்க்கப்பட்ட நாள் 2020-04-16.
- ↑ "WHD 2020". www.worldhemophiliaday.org. Archived from the original on 2020-04-23. பார்க்கப்பட்ட நாள் 2020-04-16.
- ↑ "World Hemophilia Day 2010". World Federation of Hemophilia. Archived from the original on 2010-04-04. பார்க்கப்பட்ட நாள் 2010-04-17.
- ↑ "World Hemophilia Day 2009". World Federation of Hemophilia. Archived from the original on 2012-06-18. பார்க்கப்பட்ட நாள் 2010-04-17.
- ↑ "World Hemophilia Day - 2008". பார்க்கப்பட்ட நாள் 2010-04-17.
- ↑ "World Hemophilia Day". Archived from the original on 2011-03-24. பார்க்கப்பட்ட நாள் 2010-04-17.