உலக ஒருமைப்பாடு
பண்டைத் தமிழர் நாகரிகம் பண்பாட்டில் சிறந்து இருந்தனர். தமிழ்நாட்டில் உழவு, நெசவு,வாணிகம் போன்ற தொழில்களும் அவற்றின்
சார்பு தொழில்களும் சிறந்திருந்தன. கடல்கடந்து வெளிநாடுகளுக்கும் சென்று தமிழர் வாணிகம் செய்து சிறந்தனர். நமது பண்பாடு, நாகரிகம், மொழி யாவும் வெளிநாடுகளில் சிறக்க காரணம் பண்டைத் தமிழர்களே. கணியன் பூங்குன்றனார் என்னும் புலவரின் புறப்பாடல் ஒன்றே நம் தமிழரின் உலக ஒற்றுமை கொள்கையை உலகுக்கு பறைசாற்றும்.
யாதும் ஊரே யாவரும் கேளீர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
உலக மக்கள் யாவரையும் உறவாக என்னும் பண்டைய தமிழர்களின் உள்ளம் உயர்ந்ததேயாகும்