உலக கண்ணொளி தினம்

உலக கண்ணொளி தினம் (World Sight Day) 2000 -ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் இரண்டாவது வியாழக்கிழமை அன்று கடைபிடிக்கப்படுகிறது[1].

நோக்கம்

தொகு

பார்வை இழப்பை தடுப்பது, கண் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை முதலியன குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நாளின் நோக்கமாகும். பிறக்கும் போதே சிலர் கண் பார்வை இல்லாமல் பிறக்கின்றனர். பல்வேறு காரணங்களால் காலப்போக்கில் பார்வை குறைபாடு ஏற்படுவதும் உண்டு. பார்வையற்ற மக்கள் சமூகத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். பிறரைச் சார்ந்தே வாழ வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்கிறது.

பின்புலம்

தொகு

உலக சுகாதார அமைப்பின் 2002 அறிக்கையின் படி, உலகில் உள்ள 45 மில்லியன் கண்பார்வையற்றோரில் 80 விழுக்காட்டினர் 50 வயதிற்கும் அதிகமானோர் ஆவர். கண்பார்வையற்றோரில் 90 வீதமானோர் வறிய நாடுகளில் வாழ்கின்றனர்[2]. மேலும், கண்பார்வையின்மைக்கு முக்கியமான காரணிகளான கண் புரை நோய், கண் அழுத்த நோய் போன்றவற்றுக்கு இலகுவாகவும், மலிவாகவும் சிகிச்சை அளிக்க முடியும். பன்னாட்டு அரிமா சங்கங்கள் கண்பார்வையின்மையைத் தவிர்க்க உதவும் சில பன்னாட்டு அமைப்புகளுடன் இணைந்து முதன் முதலாக 1998, அக்டோபர் 8 ஆம் நாள் உலக கண்ணொளி நாளைக் கடைப்பிடித்தது. இந்த நிகழ்வு பின்னர் உலக சுகாதார அமைப்பின் விசன் 2020 என்ற பன்னாட்டுத் திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு, 2000 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் மாதங்களில் இரண்டாவது வியாழக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது[3].

பார்வை தொடர்பான விழிப்புணர்வுகள்

தொகு

விசன் 2020 திட்டத்தில் 2020 ஆம் ஆண்டளவில் கீழ்க்கண்ட ஏழு நோய்களால் எவரும் பார்வை இழக்ககூடாது என்பதைக் கருத்தில் கொண்டு அரசுகள் செயல்பட உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது.

  • கண்புரை
  • கண்ணிமை உட்புற டிராகோமா
  • கண்ணில் நீர் வழிதல்
  • குழந்தைகளில் பார்வைக் குறைபாடு
  • மங்கலான பார்வை
  • சர்க்கரை நோயால் விழித்திரைப் பாதிப்பு
  • கண் நீர் அழுத்த நோய்

ஏனெனில் இவை அனைத்திற்கும் முறையான சிகிச்சை முறைகளும், மருந்துகளும் கண்டறியப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_கண்ணொளி_தினம்&oldid=2431898" இலிருந்து மீள்விக்கப்பட்டது