உலகக் கொசு நாள்

(உலக கொசு நாள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

உலகக் கொசு நாள் (World Mosquito Day), ஆண்டுதோறும் ஆகத்து 20 ஆம் நாள் பிரித்தானிய மருத்துவர் ரொனால்டு ராஸ் என்பவரின் நினைவாக உலக அளவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சர் ரொனால்டு ராஸ் 1897 ஆகத்து 20 ஆம் நாள் பெண் கொசுகள் மூலமாக மலேரியா நோய் மனிதருக்குப் பரவுகிறது என முதன் முதலில் கண்டுபிடித்தார்.[1] இவர் தனது கண்டுபிடிப்பின் பின்னர் இந்நாள் உலக கொசு நாள் என்ற பெயரில் ஆகத்து 20 அன்று ஆண்டு தோறும் கொண்டாடப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.[1]

மருத்துவர் ரொனால்டு ராஸ்

சுகாதார மற்றும் வெப்பவலய மருத்துவத்துக்கான இலண்டன் பள்ளி ஆண்டு தோறும் இந்நாளில் கண்காட்சிகள் உட்படப் பல கொண்டாட்டங்களை 1930களில் இருந்து நடத்தி வருகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "World Mosquito Day 2010". Department for International Development. 20 ஆகத்து 2010. Archived from the original on 2012-11-21. பார்க்கப்பட்ட நாள் 21 நவம்பர் 2012.
  2. "Abuzz over malaria on World Mosquito Day - AlertNet". Archived from the original on 19 ஆகத்து 2012. பார்க்கப்பட்ட நாள் 20 ஆகத்து 2016.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலகக்_கொசு_நாள்&oldid=3574947" இலிருந்து மீள்விக்கப்பட்டது