பன்னாட்டுக் குழந்தைகளின் புத்தக நாள்

(உலக சிறுவர் நூல் நாள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பன்னாட்டுக் குழந்தைகள் புத்தக நாள் (International Children’s Book Day – ICBD) 1967 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோராண்டும் ஏப்ரல் 2 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளாது ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் (1805–1875) என்னும் குழந்தை இலக்கிய எழுத்தாளரின் பிறந்த நாள் ஆகும்.[1] "இளம் மக்களுக்கான புத்தகங்களின் பன்னாட்டு வாரியம்" (International Board on Books for Young People – IBBY) என்னும் பன்னாட்டு ஆதாய நோக்கற்ற அமைப்பு (International Non–Profit Organization) இந்நாளைக் கொண்டாடும் முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன்

நோக்கம்

தொகு

பன்னாட்டுக் குழந்தைகள் புத்தக நாளானது பின்வரும் இரண்டு நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகக் கொண்டாடப்படுகிறது.[1]

  • புத்தகம் படிக்கும் விருப்பத்தை ஊக்குவித்தல்
  • குழந்தைகளுக்கான புத்தகங்களின் மீது கவனத்தை ஈர்த்தல்

வழிமுறை

தொகு

பன்னாட்டுக் குழந்தைகள் புத்தக நாளைக் கொண்டாடும் முன்முயற்சியை மேற்கொள்ளும் வாய்ப்பு, ஒவ்வோராண்டும் இளம் மக்களுக்கான புத்தகங்களின் பன்னாட்டு வாரியத்தின் வெவ்வேறு நாட்டுப் பிரிவிற்கு வழங்கப்படும். அந்நாடு அவ்வாண்டிற்கான கொண்டாட்டக்கருத்தை முடிவு செய்து, தன்நாட்டின் சிறந்த எழுத்தாளரை அழைத்து உலகக் குழந்தைகளுக்கு அவ்வாண்டிற்கான செய்தியை எழுதவும் நன்கறியப்பட்ட ஓவியரை அழைத்து அவ்வாண்டிற்கான சுவரொட்டியை வடிவமைக்கவும் செய்யும். அந்தச் செய்தியும் சுவரொட்டியும் பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டு புத்தகங்கள், படித்தல் ஆகியவற்றின் மீதான ஆர்வம் வளர்த்தெடுக்கப்படும்.[1]

பன்னாட்டு குழந்தைகள் புத்தக நாளைக் கொண்டாட இளம் மக்களுக்கான புத்தகங்களின் பன்னாட்டு வாரியத்தின் வெவ்வேறு பிரிவுகள் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன[1]

  • மக்கள்திரள் ஊடகங்களின் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
  • பள்ளிகள், பொதுநூலகங்கள் ஆகியவற்றில் நிகழ்ச்சிகளை நடத்தப்படுகின்றன.
  • குழந்தைகளின் புத்தகங்களைக் கொண்டாடும் நிகழ்ச்சிகள நடத்தப்படுகின்றன.
  • எழுத்தாளர்கள், ஓவியர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல், இலக்கியப் படைப்புப் போட்டி, புத்தகங்களுக்கு விருது வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 International Children’s Book Day