உலக தலசீமியா நாள்

உலக தலசீமியா நாள் (World Thalassemia day) ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் 8 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.[1] தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் போராட்டத்தையும் இவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தப் போராடும் மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் முயற்சிகளை கௌரவிக்கும் வகையிலும் இந்நாள் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்கிறது.

தலசீமியா என்பது மரபு சார்ந்த ஓர் இரத்த நோய் ஆகும். இரத்தத்தில் இரத்தச் சிவப்பணுக்கள் உற்பத்தி குறைவதால் இந்நோய் தோன்றுகிறது.[2][3] தலசீமியா நோய் இரத்த அணுக்களை பலவீனப்படுத்தியும் அழிக்கும். இந்நோய் கண்டவர்களின் உடலால் போதுமான ஈமோகுளோபினை உருவாக்க இயலாது. ஆல்பா தலசீமியா, பீட்டா தலசீமியா போன்ற நோய் வகைகளும் இவற்றின் சில துணைப்பிரிவு நோய் வகைகளும் உள்ளன. இந்நோய்க்கு சிகிச்சையளிக்க நோயாளிக்கு தொடர்ந்து இரத்தம் செலுத்த வேண்டும். குருத்தணு சிகிச்சை நம்பிக்கை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.[4]

நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தப் போராடும் மருத்துவர்கள், அறிவியலாளர்கள், மருத்துவ ஊழியர்களின் முயற்சிகளைக் கௌரவிக்கும் வகையிலும் உலகம் முழுவதும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.[5]

மேற்கோள்கள் தொகு

  1. "இன்று உலக தலசீமியா நோய் தினம்: விழிப்புணர்வே தடுக்கும் மருந்து!" (in ta). https://www.hindutamil.in/news/tamilnadu/163685-.html. 
  2. "What Are Thalassemias?". 3 July 2012 இம் மூலத்தில் இருந்து 26 August 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160826182827/http://www.nhlbi.nih.gov/health/health-topics/topics/thalassemia. 
  3. "சித்தேரி மலைவாழ் மக்களைக் கலங்கடிக்கும் தலசீமியா". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2012/jul/19/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-528575.html. பார்த்த நாள்: 8 May 2022. 
  4. "தலசீமியா: ஸ்டெம்செல் தான பிரசாரத்தில் ஈடுபடும் கோவை பெண்". 2019-11-19. https://www.bbc.com/tamil/india-50465481. 
  5. "World Thalassemia Day 2022: Date, history, theme, and significance". https://www.indiatoday.in/information/story/world-thalassemia-day-2022-date-history-theme-and-significance-1946828-2022-05-08. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_தலசீமியா_நாள்&oldid=3427878" இருந்து மீள்விக்கப்பட்டது