உலக தாவரவள மண்டலங்கள்

[File:Vegetation-no-legend.PNG|thumb|right|400px|Biomes classified by vegetation

  பனிவெளி
  தைகா
  மிதவெப்ப அகலிலை, கலப்புக் காடு
  மிதவெப்ப புல்வெளிகள்
   உள்வெப்ப ஈரப்பதக் காடு
  நடுவண்தரைக் கடல் வகை
  வெப்ப, உள்வெப்ப ஈரப்பத அகலிலைக் காடு(பருவமழைக்காடு)
  பாலைநிலம்
  வறள்புதர்க் காட்டு நிலம்
  உலர் புல்வெளி
  செம்பாலை நிலங்கள்
  சவன்னா புல்வெளி
  மரச் சவன்னா
  வெப்ப, மிதவெப்ப உலர் அகலிலைக் காடு
  வெப்ப மழைக் காடு
  ஆல்பைன் பனிவெளி
  மான்ட்டேன் காடு

]]

உலகத் தாவரவள மண்டலங்கள் காலநிலை சார்ந்த உயிர்மண்டலத் (biome] தாவரவள (Vegetation)வகைபாடாகும்.


புவியில் காலநிலை

தொகு
 
புவியுலகத் தரைசார் உயிர்மண்டலங்கள்

புவியில் பொதுவாக மூன்று காலநிலை மண்டலங்கள் உள்ளன. அவை வெப்ப மண்டலம், மித வெப்ப மண்டலம், துருவ மண்டலம் என்பவையாகும். மற்ற வகைகள் இவற்றைச் சார்ந்தவை ஆகும். காடுகள்,புல்வெளிகள், பாலைவனங்கள் ஆகியவை புவியின் வட கோளப்பகுதியில் பரவியுள்ளன. வட கோளப்பகுதியில் தான் நிலப்பரப்பு மிக அதிகமாக உள்ளது.ஆண்டு முழுவதும் அதிக வெப்பம், அதிக மழை பொழிவு, ஈரப்பதம் முதலியவை இருப்பதால் நிலநடுக்கோடு முதல் 80 வடக்கு அட்சரேகை வரையுள்ள நிலத்தில் வெப்பமண்டலக் காடுகள் சூழ்ந்திருக்கும்.

கண்டங்களின் கிழக்குப் பகுதியில் 80 முதல் 300 வடக்கு வரை வெப்ப-நனைந்த, பசுமை மாறா, இலையுதிர் காடுகளைக் காணலாம். இதற்கு காரணம் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் பொழியும் குறிப்பிட்ட பருவ மழையேயாகும். இந்த அட்ச ரேகைகளின் எல்லைக்குள் அமைந்திருக்கும் கண்டங்களின் மத்திய பகுதிகளில் உயரமான புற்களால் அமைந்த ஸவான்னா புல்வெளிகளைக் காணலாம். இந்தியா,சூடான், அமெரிக்க ப்ரெய்ரி புல்வெளிகளை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். கண்டங்களின் தட்பவெப்ப நிலையும்,குறைந்த மழையுமே இப்பகுதிகளின் இத்தாவர வளத்திற்குக் காரணங்களாகும்.

கண்டங்களின் மேற்குப் பகுதிகளில் 150 முதல் 300 வடக்கு வரை வறண்ட பாலைவனங்களே உண்டு. இதற்குக் காரணம் இப்பகுதிகள் பருவ காற்றுகளுக்கு மறை பகுதிகளில்() அமைந்திருப்பதேயாகும். 300 முதல் 400 வடக்கு வரை 3 வகையான இயற்கை அமைப்புகளைக் காணலாம். இவ்வெல்லைகளில் கிழக்கு ஓரங்களில் வளமான இலையுதிர்க்காடுகளும், அகன்ற இலை பசுமை மாறாக் காடுகளும் அவற்றைச் சார்ந்து மேற்குப் பகுதிகளில் ஸ்கிளிரோஃபில்லர்ஸ் எனப்படும் வறட்சித் தாவரங்களைக் கொண்ட புதர்க்காடுகளும் காணப்படும். கண்டங்களின் மத்தியப் பகுதிகளில் ஸ்டெப்பி என்ற புல்வெளிகள் அமைந்திருக்கும் இதுவே கண்டங்களின் காலநிலையை முடிவு செய்யும்.

ஊசியிலைக்காடுகள்

தொகு

ஊசியிலைக்காடுகள் கிழக்குத் திசையில் 500 முதல் 600 வடக்கு வரை பரவியிருக்கும். ஆனால் மேற்கு திசையில் ஆர்டிக் வட்டமான 66.50 வரை பரவியிருக்கும். இவற்றை போாியல் காடுகள் என்றும் கூறுவர். குறைந்த வெப்பம், பனிபொழிவோடு கூடிய குளிர்காலம், மிகக் குறைந்த மழை ஆகியவையே இக்காடுகளின் பண்பாகும். பெரும்பாலும் மேற்குப் பகுதிகளில் இலையுதிர்க்காடுகளுடன் இவை சேர்ந்து காணப்படுவதும் உண்டு.

பனிவெளிக் காடுகள்

தொகு

போாியல் ஊசியிலைக் காடுகளுக்கு வடக்கேதான் தூந்திரவனம் அமைந்துள்ளது. ஆண்டின் பெரும்பகுதி நிரந்தர பனியால் மூடப்பட்டிருக்கும். பனியின் கனம் கிட்டத்தட்ட 30 செ.மீ.வரை இருக்கும் இதனால் தாவரங்கள் உயிர்வாழ உகந்த காலம் மிக குறுகியதாகும். தூந்திரவனத்திற்கு வடக்கே நிரந்தர பனி படிந்த தாவர இனம் வாழத் தகுதியற்ற ஆர்டிக் வட்டம் அமைந்துள்ளது.

வெப்ப மண்டலம்

தொகு

நிலநடுக்கோட்டிற்கு 80 வடக்கிற்கும் 80 தெற்கிற்கும் இடைப்பட்ட பகுதியே வெப்ப மண்டலம் எனப்படுகிறது. வெப்பநிலை சீராக அமைந்திருப்பது வெப்பமண்டலத்தின் சிறப்புப் பண்பாகும். உயர் மற்றும் குறைந்த வெப்ப நிலைகளுக்குள்ள வேறுபாடு 10 முதல் 50 செல்சியஸ் அளவாகத்தான் இருக்கும். அதாவது கோடைகாலத்தின் அதிக வெப்ப அளவிற்கும், குளிர்காலத்தின் மிகக் குறைந்த வெப்பத்திற்கும் உள்ள வேறுபாடு 50 செல்சியஸுக்கு மிகாது. வெப்பமண்டலப் பகுதிகளிலேயே காடுகள், புல்வெளிகள் மற்றும் பல வகை தாவர இனங்களை காண நோிடுவதன் காரணம் மழை மாதங்களின் எண்ணிக்கையே ஆகும். அதிக மழை, அதிக வெப்பம், வளமான மட்குடன் கூடிய மண் முதலிய காரணங்களால் இங்கு தாவர வளம் மிகச் செழிப்புடன் காணப்படும். இதையே வெப்பமண்டல மழைக் காடுகள் என்பர். இதையே தாவரவள மண்டலத்தின் உச்சகட்டடம் என்று குறிப்பிடுவர். தற்சமயம் மனித குறுக்கீடு அற்ற வெப்பமண்டல மழைக்காடுகளை நியூகினி, பசுபிக் கடல் தீவுகள், சுமத்ரா, மடகாஸ்கா், மேற்கு ஜாவா, போர்னியா, வட அமேசான் வடிகால் பகுதி, ஜான்சிபார் முதலிய இடங்களில் காணலாம். இந்தியாவைப் பொறுத்த வரையில் அஸ்ஸாம் மற்றும் வடக்குக் கர்நாடகா, குடகு, ஆணைமலைப் பகுதிகளில் வெப்பமண்டல மழைக் காடுகள் காணப்பட்டாலும் அவற்றை முழுமையான மழைக்காடுகள் என்று சொல்ல இயலாது. மேகங்கள் சூழ்ந்த மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சி ஒரு காலத்தில் உலகிலேயே அதிக மழை பெறும் பகுதியாகவும். செழிப்பான வெப்பமண்டலக் காடுகளைக் கொண்டதாகவும் கருதப்பட்டது.

இலையுதிர்க்காடுகள்

தொகு

உலகில் வெப்பமண்டல மலைக்காடுகள் பெரும்பாலும் ஆண்டு முழுவதும் மழை பெய்யும் பகுதிகளில் காணப்படும். சில பகுதிகளில் மழை குறிப்பிட்ட பருவகாலத்தில் மட்டுமே பெய்தால் அங்கு இலையுதிர் இனங்கள் தோன்றும். இக்காடுகளின் வளர்ச்சியும், வாழ்க்கை சூழலும் பருவமழையைச் சார்ந்தே இருப்பதால் இவற்றை பருவமழைக் காடுகள் என்றும் கூறுவர். இந்தியாவில் மழைக் காலத்தில் பூப்பதும், வெயில் காலத்தில் இலைகளை உதிர்ப்பதம் இக்காடுகளின் சிறப்பாகும். இலையுதிர்க்காடுகளை ஈர இலையுதிர்க்காடுகள், உலர் இலையுதிர்க்காடுகள் என இருவகையாகப் பிாிக்கலாம்.


வெப்பமண்டலப் புல்வெளிகள்

தொகு

வெப்பமண்டலப் பகுதியில் புல்வெளிகள் அகன்ற பரப்பை ஆட்கொண்டுள்ளன. அவற்றை சவானா என்பர். சவானா என்ற அமொிக்க வார்த்தைக்கு காடுகளால் போர்த்தப்பட்ட புல்வெளி என்பது பொருள். ஆனால் தற்போது வெப்பமண்டல பகுதியில் தனித்த புல்வெளிகளையோ அல்லது மரங்களோடு கூடிய தனித்த புல்வெளிகளையோ இச்சொல் குறிக்கிறது. மாறி மாறித் தோன்றும் ஈர மற்றும் உலர் பருவங்களோடு கூடிய வெப்பமண்டல காலநிலையே சவனாவின் சிறப்பாகும். தென் அமொிக்கா, ஆப்பிாிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் சவானா புல்வெளிகளைக் காணலாம்.

பாலைவனங்கள்

தொகு

புவியின் நிலப் பகுதியில் 7-ல் ஒரு பங்கு பாலைவனமாக உள்ளது. அதன் பரப்பு ஆண்டிற்கு ஆண்டு அதிகாித்து வருகிறது. மனிதன் வாழும் 6 கண்டங்களில் ஐரோப்பா தவிர மற்ற எல்லாக்கண்டங்களிலும். பாலை நிலம் உண்டு. பாலைவனத்தை வெப்ப பாலை, குளிர் பாலை என இரு வகையாகப் பிாி்க்கலாம். வெப்ப பாலைவனத்திற்கு சஹாரா ஓர் எடுத்துக்காட்டாகும். பகல் பொழுது வெப்பம் மிக அதிகம். உலகிலேயே மிக காற்று - வெப்பம் உள்ள பகுதி சஹாராவின் லிபியா பகுதியாகும். இங்கு நிழலின் வெப்பமே 580</sup ெசல்சியஸ் ஆகும்.

குளிர் பாலைவனத்திற்கு எடுத்துக்காட்டு மங்கோலிய காேபிப்பாலைவனம் ஆகும். கடுங்குளிர் காலமும், நீ்ண்ட குளிர்ப்பருவமும் இதன் பண்பாகும். வெப்பநிலை உறைநிலைக்கு கீழே போவதுண்டு. ஐக்கிய அமொிக்க மரணப்பள்ளத்தாக்கு, தென்அமொிக்க படகோனியா, தென்ஆப்பிாிக்க கலஹாாி, வடஆப்பிாிக்க சஹாரா, மத்திய ஆசிய கோபி, அரேபிய, ஆஸ்திரேலிய பாலைவனங்கள் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவை ஆகும். இந்தியாவில் இராஜஸ்தானில் உள்ள தார்ப்பாலைவனம் குறிப்பிடத்தக்கதாகும்.

மிதவெப்ப மண்டலம்

தொகு

மிதவெப்ப மண்டலம் இருவகைப்படும். அவை கதகதப்பான மித வெப்ப மண்டலம் மற்றும் குளிர் மித வெப்ப மண்டலம். கதகதப்பான மித வெப்ப மண்டல பகுதியில் குளிர்காலம் கதகதப்பாக இருக்கும். குளிர் மித வெப்ப மண்டல பகுதியில் குளிர் சற்று கடுமையான குளிருடன் இருக்கும். கதகதப்பான மித வெப்ப மண்டல தாவரங்களை ஜப்பான், மேற்கு சிலி, ஐரோப்பாவில் காணலாம். இக்காடுகளில் காணப்படும் முக்கியத் தாவரங்களில் அகன்ற - தடித்த - பசுமைமாறா இலைகளைக் கொண்ட மரங்கள், ஊசியிலை மரங்கள், புதர்கள் காணப்படுகிறது.


மேற்கோள்கள்

தொகு

www.nationalgeographic.org/encyclopedia/vegetation-region/ www.eecrg.uib.no/Presentations/World%20Veg%20Biomes.pdf https://en.wikipedia.org/wiki/Vegetation worldgeography.abc-clio.com world-geography-games.com www.theworldgeography.com en.wikipedia.org/wiki/World_(geography)

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_தாவரவள_மண்டலங்கள்&oldid=3913288" இலிருந்து மீள்விக்கப்பட்டது