உலக நுகர்வோர் உரிமைகள் நாள்
ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சு 15 ஆம் திகதி உலக நுகர்வோர் உரிமைகள் நாள் (World consumer rights day) ஆகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சு மாதம் 15 ஆம் திகதியை தேசிய நுகர்வோர் உரிமைகள் நாள் (National consumer rights day) ஆகப் பிரகடனப்படுத்தியுள்ளது.
வரலாறு
தொகுஅமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜோன். எப். கென்னடி, அமெரிக்க பாராளுமன்றத்தில் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாகவும், நுகர்வோர் உரிமைகள் சட்டம் தொடர்பாகவும் ஆற்றிய முக்கிய உரை 1962 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்றது. அவ்வுரையே உலக அளவில் ஒரு நாட்டுத் தலைவர் நுகர்வோர் பாதுகாப்புத் தொடர்பாக ஆற்றிய முக்கிய உரையாகக் கணிக்கப்படுகின்றது. அதே வேளை நுகர்வோர் பாதுகாப்புத் தொடர்பாகக் கரிசனை காட்டிய முதலாவது நாட்டுத் தலைவராக ஜோன். எப். கென்னடி கணிக்கப்படுகின்றார். 1962 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்ற அவ்வுரை உலக அளவில் பாரிய அலைகளைத் தோற்றுவித்தது. அதன் விளைவாக 1962 ஆம் ஆண்டு, ஒவ்வொரு வருடமும் மார்ச்சு மாதம் 15 ஆம் திகதியை உலக நுகர்வோர் உரிமைகள் நாள் ஆக பிரகடனப்படுத்தி அறிவிக்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு அதாவது 1963 ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு வருடமும் மார்ச்சு மாதம் 15 ஆம் திகதி உலக நுகர்வோர் உரிமைகள் நாள் ஆக அனுட்டிக்கப்படுகின்றது.