உலக வர்த்தக மையம் (கொழும்பு)

உலக வர்த்தக மையம் கொழும்பில் உள்ள ஒரு வர்த்தக கட்டடத் தொகுதியாகும். இதுவரை கட்டப்பட்ட கட்டிடங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் உயரமான கட்டடமாக உலக வர்த்தக மையம் கருதப்படுகின்றது. நிலத்தில் இருந்து 152 மீற்றர் (499 அடி) உயரமாக இருக்கும் இந்தக் கட்டடம் தெற்கு ஆசியாவின் மூன்றாவது உயரமான கட்டடமாகவும் கணிக்கப்படுகின்றது.[1][2][3]

கொழும்பு உலக வர்த்தக மையம்
Map
பொதுவான தகவல்கள்
இடம்கொழும்பு, இலங்கை
கட்டுமான ஆரம்பம்1990
நிறைவுற்றது1996
திறப்பு12 அக்டோபர் 1997
மேலாண்மைORCPLC
உயரம்
கூரை152 m (499 அடி)
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை40

12, அக்டோபர் 1997 இல் இலங்கையின் முன்னாள் அதிபரான சந்திரிக்கா பண்டாரநாயக குமாரணத்தூங்கவினால் இந்தக் கட்டிடத் தொகுதி திறந்துவைக்கபட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு என்று இரண்டு சமனான கோபுரங்களை இந்த அமைப்பு கொண்டுள்ளதுடன், ஒவ்வொரு கோபுரமும் 40 அடுக்குகளைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு