உலக விஞ்ஞான விழா 2008

2008 உலக விஞ்ஞான விழா அல்லது 2008 உலக அறிவியல் விழா நியூயார்க் நகரத்தில் நடந்த ஒரு அறிவியல் விழா. மே8 - ஜூன் 1, 2008 காலகட்டத்தில் நடைபெற்ற இவ்விழாவில் குழு விவாதங்களும் பல்லூடக அளிக்கைகளும் இடம் பெற்றன. இவ்விழா பற்றிய எண்ணக்கரு கொலம்பியா பல்கலைக்கழப் பேராசிரியர் பிரயன் கிரீன் மற்றும் அவரது மனைவி நடிகை டிரேசி டே ஆகியோரால் உருவாக்கப்பட்டது. நியூயார்க நகரம், கொலம்பியா பல்கலைக்கழகம், நியூயார்க் பல்கலைக்கழகம், மெட்ரோபாலிட்டன் கலை அருங்காட்சியகம் ஆகிய நிறுவனஙகளுடன் இணைந்து இது நடத்தப்பட்டது.

உலக விஞ்ஞான விழா, 2008
உலக அறிவியல் விழாவில் நியூ யோர்க் உயர்நிலை பள்ளி மாணவர்கள் லியோன் லெடர்மேனை நேர்காணுகின்றன.
வருகைப்பதிவு.... (2008)

சில புகைப்படங்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_விஞ்ஞான_விழா_2008&oldid=3890613" இலிருந்து மீள்விக்கப்பட்டது