உலுல்சாசைட்டு
உலுல்சாசைட்டு (Lulzacite) என்பது Sr2Fe2+(Fe2+,Mg)2Al4(PO4)4(OH)10.[1][2] என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இசுட்ரோன்சியம் தனிமத்தின் பாசுபேட்டு கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது.
உலுல்சாசைட்டு Lulzacite | |
---|---|
பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்ட உலுல்சாசைட்டு கனிமம் | |
பொதுவானாவை | |
வகை | பாசுபேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | Sr2Fe2+(Fe2+,Mg)2Al4(PO4)4(OH)10 |
இனங்காணல் | |
நிறம் | சாம்பல் பச்சை முதல் பசுமஞ்சள் வரை |
படிக இயல்பு | வடிவமற்ற திரட்டுகள்; அரிதாக சிறிய நிறைவடிவ படிகங்கள் |
படிக அமைப்பு | முச்சாரிவச்சு |
பிளப்பு | இல்லை |
மோவின் அளவுகோல் வலிமை | 5.5–6 |
மிளிர்வு | கண்ணாடி பளபளப்பு |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும்–ஒளிகசியும் |
ஒப்படர்த்தி | 3.55 |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (−) |
ஒளிவிலகல் எண் | nα = 1.654 nβ = 1.674 nγ = 1.684 |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.030 |
மேற்கோள்கள் | [1][2][3] |
பிரான்சு நாட்டில் உள்ள குவார்ட்சைட்டு வைப்புகளிலில் (47°42′50″வடக்கு 1°29′20″மேற்கு) இந்த கனிமம் முதலில் 2000 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. கனிமத்தை கண்டுபிடித்த பிரெஞ்சு புவியியலாளர் ஒய். உலுல்சாக்கு நினைவாக அவர் பெயர் கனிமத்திற்கு வைக்கப்பட்டது. இந்த வைப்புப் படிவுகளில் உலுல்சாசைட்டு கனிமம் குவார்ட்சு மற்றும் சிடரைட்டு கனிம இழைகளின் குவார்ட்சைட்டு-சுண்ணாம்பு பற்றிணைப்பாக காணப்படுகிறது. இவ்விழைகளில் அபாடைட்டு, கோயாசைட்டு மற்றும் பைரைட்டு ஆகிய கனிமங்களும் சேர்ந்திருக்கின்றன.[3]
P1 என்ற இடக்குழுவுடன் உலுல்சாசைட்டு முச்சரிவச்சுக் கனிமமாக படிகமாகிறது. (Pb2Zn(Fe2+,Zn)2Fe3+4(AsO4)4(OH)10).[3][4] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட இயேமிசைட்டு கனிமத்தின் படிக அமைப்பை ஒத்த வடிவமைப்பையே உலுல்சாசைட்டும் ஏற்றுள்ளது.
பன்னாட்டு கனிமவியல் சங்கம் உலுல்சாசைட்டு கனிமத்தை Lul[5] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Lulzacite Mineral Data". webmineral.com. David Barthelmy. பார்க்கப்பட்ட நாள் September 4, 2010.
- ↑ 2.0 2.1 "Lulzacite". mindat.org. Jolyon Ralph and Ida Chau. பார்க்கப்பட்ட நாள் September 4, 2010.
- ↑ 3.0 3.1 3.2 Yves Moëlo; Bernard Lasnier; Pierre Palvadeau; Philippe Léone; François Fontan (15 March 2000). "Lulzacite, Sr2Fe2+(Fe2+,Mg)2Al4(PO4)4(OH)10, a new strontium phosphate (Saint-Aubin-des-Châteaux, Loire-Atlantique, France).". Comptes Rendus de l'Académie des Sciences, Série IIA 330 (5): 317–324. doi:10.1016/S1251-8050(00)00152-X. Bibcode: 2000CRASE.330..317M.
- ↑ "Jamesite". mindat.org. Jolyon Ralph and Ida Chau. பார்க்கப்பட்ட நாள் September 4, 2010.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.