உலூனா 14
உலூனா 14 (E - 6LS தொடர்) (Luna 14 (E-6LS series))என்பது சோவியத் ஒன்றியத்தால் நடத்தப்பட்ட லூனா திட்டத்தின் ஆளில்லா விண்வெளி பயணமாகும். இது உலூனிக் 14 என்றும் அழைக்கப்பட்டது.
கண்ணோட்டம்
தொகுஇந்த உலூனா 14 விண்கலம் உலூனா 12 வடிவமைப்பைப் போலவே இருந்ததாகவும் , உலூனா 10 கொண்டு சென்ற கருவிகளையே கொண்டுசென்றதாகவும் நம்பப்படுகிறது. புவி, நிலாப் பொருண்மைகளின் ஊடாட்டம், நிலா ஈர்ப்பு விசை - வெவ்வேறு வட்டணைகளில் விண்கலத்திற்கு தகவல்தொடர்புகளின் பரப்புதலும் அதன் நிலைப்பும் சூரிய ஆற்றல் துகள்கள், அண்டக் கதிர்கள், நிலா இயக்கம் பற்றிய ஆய்வுகளுக்கான தரவுகளை இது வழங்கியது. இந்த விண்கலம் லூனா தொடரின் இரண்டாவது தலைமுறையின் இறுதி கலமாகும்.
லூனா 14 1968, ஏப்ரல் 10 அன்று நிலா வட்டனையில் 19:25 ஒபொநேரத்தில் வெற்றிகரமாக நுழைந்தது. தொடக்க வட்டணை அளவுருக்கள் 160 × 870 கிலோமீட்டர்கள், 42 ′ சாய்வில் இருந்தன. N1 - L3 முன்னோட்ட நிலா தரையிறங்கும் திட்டத்திற்கு ஆதரவாக தகவல் தொடர்பு அமைப்புகளை சோதிப்பதே இந்த விண்கலத்தின் முதன்மை குறிக்கோளாக இருந்தது. விண்கல வட்டணையில் இருந்தான தரைக் கண்காணிப்பும் நிலா ஈர்ப்பின் பிறழ்வுகளைத் துல்லியமாக வரைபடமாக்கலும் எதிர்கால நிலாப் பயணங்களின் பாதைகளைக் கணிக்கப் பெரிதும் உதவும். உலூனா 14 சூரியனில் இருந்துவரும் அண்ட கதிர்கள், மின்னூட்டத் துகள்களைப் பற்றி ஆய்வு செய்வதற்கான அறிவியல் கருவிகளையும் எடுத்துச் சென்றது. இருப்பினும் சில விவரங்களே வெளிப்படுத்தப்பட்டுள்ளன.. இந்தப் பணி 75 நாட்கள் நீடித்தது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "In Depth | Luna 14". Archived from the original on 2020-02-17. பார்க்கப்பட்ட நாள் 2019-02-21.