உலூனா 15 (Luna 15) என்பது சோவியத் லூனா திட்டத்தின் எந்திரன்வகை விண்வெளிப் பயணமாகும். இது 1969 ஜூலை 21 அன்று நிலாவில் மோதியது.

Luna 15
Stamp depicting a Ye-8-5 bus spacecraft
திட்ட வகைLunar sample return
காஸ்பார் குறியீடு1969-058A
சாட்காட் இல.4036
திட்டக் காலம்8 days achieved
விண்கலத்தின் பண்புகள்
செயற்கைக்கோள் பேருந்துYe-8-5
தயாரிப்புGSMZ Lavochkin
ஏவல் திணிவு5,667 kg (12,494 lb)[1]
உலர் நிறை2,718 kg (5,992 lb)[2]
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்13 July 1969, 02:54:42 (1969-07-13UTC02:54:42Z) UTC[3]
ஏவுகலன்Proton-K/D
ஏவலிடம்Baikonur 81/24
திட்ட முடிவு
அழிப்பு21 July 1969, 15:51 (1969-07-21UTC15:52Z) UTC
சுற்றுப்பாதை அளபுருக்கள்
Reference systemSelenocentric
Lunar சுற்றுக்கலன்
சுற்றுப்பாதையில் இணைதல்17 July 1969, 10:00 UTC
Lunar மோதல் (தோல்வியடைந்த தரையிறக்கம்)
மோதல் நாள்21 July 1969, 15:51 UTC
மோதல் தளம்17°N 60°E / 17°N 60°E / 17; 60[1]
கருவிகள்
  • Stereo imaging system
  • Remote arm for sample collection
  • Radiation detector

1969 ஜூலை 21 அன்று அப்பல்லோ 11 விண்வெளி வீரர்கள் முதல் மனித நிலவு நடைப்பயணத்தை முடித்தபோது , உலூனா 15 , எந்திரன்வகை சோவியத் விண்கலம் நிலா வட்டணையில் நிலா மேற்பரப்பில் இறங்கத் தொடங்கியது. இது அப்பல்லோ 11 பயணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு ஏவப்பட்டது. இது நிலாத் தரை மண்ணை புவிக்குக் கொணர்வதற்கான இரண்டாவது சோவியத் முயற்சியாகும். இது நிலாப் பந்தயத்தில் ஒரு நிலா மண் பதக் கூறை கொணர்வதில் அமெரிக்காவை முந்தும் குறிக்கோளுடன். 1969 ஜூன் 14 அன்று ஏவப்பட்ட E - 8 - 5 - 402 விண்கலம், அதன் ஏவூர்தியின் மூன்றாம் கட்டம் பற்றவைக்க தவறியதால் புவியின் வட்டணையை அடையவில்லை. உலூனா 15 லேண்டர் நிலாவில் இருந்து திட்டமிடப்பட்ட அமெரிக்கப் புறப்பாட்டுக்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு 15:50 மணிக்கு நிலாவில் மோதியது.

திட்டப் பணி

தொகு

உலூனா 15 விண்கலம் நிலாவின் சுற்றுவட்டப் பகுதியிலான ஈர்ப்பு விசை, பாறைகளின் வேதியியல் உட்கூறு ஆகியவற்றைப் பற்றி ஆய்வு செய்யும் திறன் கொண்டது. இது நிலாவின் மேற்பரப்பு புகைப்படத்தை வழங்கும் திறனையும் கொண்டிருந்தது. உலூனா 15 ஏவப்பட்ட பிறகு புவி இடைநிலை வட்டணையில் வைக்கப்பட்டு பின்னர் நிலாவை நோக்கி அனுப்பப்பட்டது. 1969 ஜூலை 17 அன்று, உலூனா 15 விண்கலம் நிலா வட்டணையில் நுழைந்தது. விண்கலம் இரண்டு நாட்கள் நிலா வட்டணையில் இருந்தது. அதே நேரத்தில் கட்டுப்பாட்மைப்புகள் அனைத்து விண்கல அமைப்புகளையும் சரிபார்த்து இரண்டு வட்டணை நடவடிக்கைகளை நிகழ்த்தினர்.

86 தகவல் தொடர்பு அமர்வுகளையும் நிலாவின் 52 சுற்றுப்பாதைகளையு பல்வேறு சாய்வுகளிலும் உயரங்களிலும் முடித்த பிறகு, நிலாப் பயண இறங்குமுகம் தொடங்கியது. 1969 ஜூலை 21 அன்று உலூனா 15 அதன் முதன்மை ஒடுக்கப்பொறியை15:47 ஒபொ நேரத்தில் நிலா மேற்பரப்பில் இறங்கத் தொடங்கியபோது விண்வெளி வீரர்கள் ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆல்ட்ரின் ஏற்கனவே சந்திரனில் காலடி வைத்திருந்தனர். கணக்கிடப்பட்ட உயரமான 3 கிலோமீட்டரில் (1.9 மைல்) வட்டணையை நீங்கிய நான்கு மணித்துளிகளுக்குப் பிறகு தகவல் தொடர்புகள் நிறுத்தப்பட்டன. விண்கலம் அநேகமாக ஒரு மலையின் பக்கத்தில் மோதியிருக்கலாம். மோதல் ஆயத்தொலைவுகள் 17° வடக்கு அகலாங்கிலும் 60° கிழக்கு நெட்டாங்கிலும் மரெ கிறிஸியத்தில் அமைந்து இருந்தன. இந்த உலானா 15 இன் மோதல் தளம் அப்பல்லோ 11 கலத்தின் இறங்குதளத்தில் இருந்து 564 கிலோமீட்டர் ( 344 மைல்) வடக்கும் வடகிழக்கும்(NNE) ஆகும்.

ஜோதிரெல் வங்கியில் உள்ள கதிரலைத் தொலைநோக்கி வசதியில் பிரித்தானியத் தொழில்நுட்ப வல்லுநர்கள் உலூனா 15 இன் வம்சாவளியை கவனித்த மணித்துளிகளின் பேச்சுப்பதிவு முதன்முதலில் 2009 ஜூலை 3 அன்று பொதுமக்களுக்குக் கிடைத்தது.

தாக்கங்கள்

தொகு

நிலவை அடைவதற்கும் புவிக்குத் திரும்புவதற்குமான பந்தயத்தில் , உலூனா 15, அப்பல்லோ 11 போன்ற இணையான பயணங்கள் நிகழத் தொடங்களாயின.1960 களில் அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையிலான விண்வெளிப் போட்டியின் உச்சக்கட்டம் ஏற்படலானது.[4]

ஒருங்கமைந்த சோவியத், அமெரிக்க விண்வெளி பயணங்களின் விண்வெளித்தொடர்புகளின் நிகழ்வுகள் முதன்முதலாக அமைலாயின. சோவியத் ஒன்றியம் உலூனா 15 இன் விண்கலத் திட்டம் அப்பல்லோ 11 திட்டத்துடன் மோதாது என்பதை உறுதிப்படுத்தியது. இருப்பினும் அதன் சரியான திட்டப்பணி எந்த்ந் ஊடகத்திலும் விளம்பரப்படுத்தப்படவில்லை.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Luna 15". NASA: Solar System Exploration: Missions to the Moon. Archived from the original on 12 July 2009. பார்க்கப்பட்ட நாள் 22 June 2015.
  2. "NASA Space Science Coordinated Archive: Luna 15". பார்க்கப்பட்ட நாள் 21 June 2022.
  3. Siddiqi, Asif (2018). Beyond Earth: A Chronicle of Deep Space Exploration, 1958–2016 (PDF) (second ed.). NASA History Program Office.
  4. "Missions: Luna 15". Solar System Exploration: NASA Science. Archived from the original on 10 April 2019. பார்க்கப்பட்ட நாள் 18 March 2019.
  5. . 

வெளி இணைப்புகள்

தொகு

வார்ப்புரு:Orbital launches in 1969

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலூனா_15&oldid=3789449" இலிருந்து மீள்விக்கப்பட்டது