உலூனா 17
உலூனா 17 (யே - 8 தொடரின்) LOK Luna 17 (Ye-8 series)என்பது உலூனிக் 17 என்றும் அழைக்கப்படும் லூனா திட்டத்தின் ஆளில்லா விண்வெளிப் பயணமாகும். இது நிலாவின் மேற்பரப்பில் இயங்கும்முதல் எந்திரன் வகைத் தரைய்யிறங்கியை அனுப்பியது.
ஏவுதல்
தொகுஉலூனா 17 புவியின் தங்கல் வட்டணையில் இருந்து நிலாவை நோக்கி ஏவப்பட்டு 1970 நவம்பர் 15 அன்று நிலா வட்டணையில் நுழைந்தது. விண்கலம் மெதுவாக நிலாவில் மரீ இம்ப்ரியத்தில் (மழைக்காலக் கடலில்) தரையிறங்கியது. விண்கலத்தில் இரட்டை சாய்தளங்கள் இருந்தன. இவற்றின் வழியாக உலூனோகோடு 1, நிலா மேற்பரப்பில் இறங்கியது.
உலூனோகோடு 1 என்பது எட்டு தானாக இயங்கும் சக்கரங்களில் ஒரு பெரிய குவிந்த மூடியைக் கொண்ட குழாய் போன்ற பெட்டியைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு நிலா ஊர்தி ஆகும். உலூனோகோடு 1 ஒரு கூம்பு வடிவ உணர்சட்டம் , ஒரு உயர் திசை சுருளை வடிவ உணர்சட்டம் , நான்கு தொலக்கற்றை கதிர்நிரல்மானி , ஒரு எக்சுக்கதிர்த் தொலைநோக்கி , அண்டக்கதிர் காணிகள், ஒரு ஒருங்கொளி எதிர்தெரிப்பி (பிரான்சால் வழங்கப்பட்டது) ஆகியவற்றைக் கொண்டதாகும்.[1] மூடியின் அடிப்பகுதியில் பொருத்தப்பட்ட சூரிய மின்கல அணி வழியாக ஊர்தி இயக்கப்பட்டது.
உலூனோகோடு 1 மூன்று நிலா நாட்கள் செயல்படும் நோக்கம் கொண்டது , ஆனால் உண்மையில் பதினொரு நிலா நாட்களுக்கு (பதினொரு புவி மாதங்கள்) இயங்கியது. 1971 ஆம் ஆண்டு அக்டோபர் 4 அன்று இசுப்புட்னிக் 1 இன் ஆண்டு நிறைவை முன்னிட்டு உலூனோகோடின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன , இது 10,5 கிலோமீட்டருக்கும் (6,5 மைல்கள்) பயணித்து , படங்களை எடுத்துப் பல செய்முறைகளை நடத்தியது.
உலூனா 16, சோண்டு 8 ஆகிய சோவியத் நிலா ஆய்வுகளில் உலூனா 17 தொடர்ந்து வெற்றிகளை அடைந்தது. உலூனா 17 , உலூனோகோடு 1,தரையிறங்கியை எடுத்துச் சென்றது , இது எந்திரன்வகை நிலா ஊர்திகளின் தொடரில் முதலாவது ஆகும். இதன் கருத்துரு 1960 களின் முற்பகுதியில் தொடங்கிவிட்டது. இது முதலில் முன்னோட்ட நிலாத் தரையிறங்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருந்தது. 1969 பிப்ரவரியில் தோல்வியடைந்த பின்னர், இது நிலாவில் தரையிறங்கும் இரண்டாவது முயற்சி ஆகும்.
இறங்கும் கட்டத்தில் தரையிறங்கி நிலாவின் மேற்பரப்பில் இறங்குவதற்கு இரண்டு தரையிறங்கும் சாய்தளங்கள்கள் பொருத்தப்பட்டன.
756 - கிலோகிராம் (1,666 - பவுண்டுகள் - 11 - அவுன்சு) எடையுள்ள தரையிறங்கி சுமார் 1.3 மீட்டர் (4 அடி 5 அங்குலம்) உயரமும் , 2.15 மீட்டர் (7அடி, 1 அங்குலம்) குறுக்கும் கொண்டிருந்தது. அதன் எட்டு சக்கரங்கள் ஒவ்வொன்றும் இரண்டை முன்னோக்கியும் மற்றும் இரண்டைத் தலைகீழ் வேகங்களுக்குத் தானே கட்டுப்படுத்தப்படலாம். அதன் பெரும வேகம் மணிக்கு சுமார் மணிக்கு 100 மீ(0,062மைல் ) ஆகும் , இதற்கு 5 நொடி தாமதத் துடன் புவியியில் உள்ள ஐந்து பேர் கொண்ட ஓட்டுநர்கள் குழுவால் கட்டளைகள் அனுப்பப்பட்டன. அறிவியல் கருவிகளின் தொகுப்பு சூரிய மின்கலங்களால் இயக்கப்பட்டது ( வேதி மின்கல அடுக்குகளின் கீல் தரையிறங்கி மேல் மூடியின் உள்ளே நிறுவப்பட்டது.
நிலாவுக்குச் செல்லும் வழியில் இரண்டு நடுவழித் திருத்தங்களுக்குப் பிறகு, உலூனா 17 நிலாவின் வட்டணையில் நுழைந்து பின்னர் 1970 நவம்பர் 17 அன்று நிலா மேற்பரப்பில் 03:46:50 ஒபொநே மணிக்கு 38பாகை 17 பாகைத்துளி வடக்கு அகலாங்கிலும், 35 பாகை மேற்கு நெட்டாங்கிலும் உலூனா 16 தளத்திலிருந்து சுமார் 2,500 கிலோமீட்டர் (1,600 மைல்) தொலைவில் இருந்த மழை கடல் களத்தில் தரையிறங்கியது.
உலூனோகோடு 1 தரையிறங்கி காலை 06:28 ஒபொநே மணிக்கு நிலவில் தரையிறங்கியது. அதன் 322 புவி நாட்களில் , தரையிறங்கி 10,54 கிலோமீட்டர் (7 மைல்) பயணம் செய்து 20,000 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி படங்களையும் 206 உயர் தெளிவுத்திறன் கொண்ட இயல்காட்சியையும் புவிக்கு அனுப்பியது.
கூடுதலாக, உலூனோகோடு 1 அதன் இரிஃப்மா எக்சுக்கதிர் உடனொளிர்வு கதிர்நிரல்மானியுடன் இருபத்தைந்து மண் பகுப்பாய்வுகளைச் செய்தது. மேலும், 500 வெவ்வேறு இடங்களில் அதன் ஊடுருவல்மானி அளவீட்டைப் பயன்படுத்தியது.
கட்டுப்பாட்டாளர்கள் 1971 செப்டம்பர் 14 அன்று 13:05 ஒபொநே மணிக்கு உலுனோகோடு 1 உடனான கடைசி தகவல்தொடர்பு அமர்வை முடித்தனர். தொடர்பை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான முயற்சிகள் இறுதியாக அக்டோபர் 4 அன்று நிறுத்தப்பட்டன.
2010 மார்ச்சில், நிலா கண்காணிப்புச் சுற்றுகலன் உலூனா 17 இன் தரையிறங்கும் களத்தை படம் எடுத்தது , இது தரையிறங்கி, தரையூர்தியின் தடங்களைக் காட்டுகிறது.[2] 2010 ஏப்ரலில் அப்பாச்சி புள்ளிக் நோக்கீட்டக நிலா ஒருங்கொளி தடங்காண் செயல்முறைக் குழு இந்த நிழற்படங்களின் உதவியுடன் நீண்ட காலமாக இழந்த உலூனோகோடு 1 தரையூர்தியைக் கண்டுபிடித்ததாகவும் , ஒருங்கொளி எதிர்தெறிப்பியில் இருந்து மீள்குறிகையைப் பெற்றதாகவும் அறிவித்தது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Leonard David (May 6, 2013). "Scientists Bounce Laser Beams Off Old Soviet Moon Rover". Space News.
- ↑ "Soviet Union Lunar Rovers". Archived from the original on 10 April 2014. பார்க்கப்பட்ட நாள் 20 March 2020.
- ↑ "LOST AND FOUND: SOVIET LUNAR ROVER".