உலூனா 21
உலூனா 21 (Ye - 8 தொடர்) (Luna 21) (Ye-8 series)என்பது 1973 ஆம் ஆண்டில் லூனிக் 21 என்றும் அழைக்கப்படும் லூனா திட்டத்தின் ஒரு ஆளில்லா விண்வெளி பயணமாகும். விண்கலம் நிலாவில் தரையிறங்கி இரண்டாவது சோவியத் நிலாத் தரையூர்தி உலூனோகோட் 2 ஐ அனுப்பியது. இந்த பயணத்தின் முதன்மை நோக்கங்கள் நிலா மேற்பரப்பின் படங்களை திரட்டல் , நிலாவில்ல் இருந்து வானியல் நோக்கீடுகளி சாத்தியக்கூறுகளை தீர்மானிக்க சுற்றுப்புற ஒளி நிலைகளை ஆய்வு செய்தல் , புவியிலிருந்து ஒருங்கொளி செய்முறைகளைச் செய்தல் , சூரிய எக்சுக்கதிர்களைக் கவனித்தல் , களக் காந்தப்புலங்களை அளவிடுதல், நிலா மேற்பரப்பு பொருளின் இயக்கப் பண்புகளை ஆய்வு செய்தல் ஆகிய்னவாகும்.
திட்டப் பணி
தொகுஉலூனா 21 இரண்டாவது வெற்றிகரமான சோவியத் நிலாத் தரியூர்தி உலூனோகோட் 2 ஐ எடுத்துச் சென்றது , இது கடைசி அப்பல்லோ நிலாத் தரையிறங்கிய ஒரு மாதத்திற்குள் ஏவப்பட்டது. புரோட்டான் - கே / டி ஏவுகணை விண்கலத்தை புவியின் தங்கல் வட்டணையில் வைத்தது , அதைத் தொடர்ந்து நில்லப் பெயரும் ஊசி செலுத்தப்பட்டது. 1973 ஜனவரி 12 அன்று லூனா 21 , 90 × 100 கிமீ வட்டணையில் 60 அடி சாய்வில் நிலாவைச் சுற்றி வந்தது. ஜனவரி 13 , 14 ஆம் தேதிகளில் நிலாவண்மை 16 கிமீ உயரத்திற்கு குறைக்கப்பட்டது. ஜனவரி 15 அன்று 40 வட்டணைகளுக்குப் பிறகு, ஒடுக்க ஏவூர்தி 16 கிமீ உயரத்தில் வீசப்பட்டது., மேலும் விண்கலம் கட்டற்று வீழ்ச்சியடைந்தது. 750 மீட்டர் உயரத்தில் முக்கிய உந்துவிசை குண்டுகள் வீசத் தொடங்கி, 22 மீட்டர் உயரத்தை அடையும் வரை வீழ்ச்சியை மெதுவாக்கியது. இந்க்த கட்டத்தில் முக்கிய உந்துபொறிகள் மூடப்பட்டு , இரண்டாம் நிலை பொரிகள் எரியத் தொடங்கின , இறங்கு கலம் துண்டிக்கப்பட்டதும் மேற்பரப்பில் இருந்து ஒன்றரை மீட்டர் உயரத்தில் இருக்கும் வரை வீழ்ச்சியை குறைத்தது. இலே மோனியர் பள்ளத்தில் 23:35 மணிக்கு 25:85 N 30:45 E′ இல் மரே செரினிடடிசு (Serenity), தாரசு மலைகள் இடையே தரையிறங்கியது. தரையிறங்கி விளாடிமிர் லெனின் பொறிப்புப் பட்டயாத்தினையும், சோவியத் படையணியின் மேலுறையையும் எடுத்துச் சென்றது.
மூன்று மணி நேரத்திற்குள் ஜனவரி 16 அன்று 01:14 மணிக்குத் தரையிறங்கி நிலா மேற்பரப்பில் இறங்கியது. 840 கிலோகிராம் உலூனோகோட் 2 அதன் முன்னோடியின் மேம்படுத்திய பதிப்பாகும். மேலும் இதில் மூன்றாவது டிவி கேமரா, மேம்படுத்தப்பட்ட எட்டு சக்கர இழுவை அமைப்பு, கூடுதல் அறிவியல் கருவி ஆகியன அஐந்தன. அதன் முதல் நிலா நாளின் முடிவில் உலூனோகோட் 2 ஏற்கனவே அதன் முழு செயல்பாட்டு வாழ்க்கையிலும் உலூனோகோட் 1 ஐ விட அதிகமாக பயணம் செய்திருந்தது. மே 9 அன்று தரையிறங்கி கவனக்குறைவாக ஒரு பள்ளத்தில் உருண்டு , அதன் சூரியப் பலகங்களையும் கதிர்வீசிகளையும் தூசி மூடியது , இதனால் ஊர்தியின் வெப்பநிலை பாதிக்கப்பட்டது. தரையிறங்கியைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் தோல்வியடைந்தன , ஜூன் 3 அன்று சோவியத் செய்தி நிறுவனம் அதன் பணி முடிந்துவிட்டதாக அறிவித்தது. கடைசி தொடர்புக்கு முன்பு , தரையிறங்கி 80,000 தொலைக்காட்சி படங்களையும் 86 பரந்த புகைப்படங்களையும் எடுத்தது. மண்ணின் நூற்றுக்கணக்கான எந்திர, வேதியியல் ஆய்வுகளை நடத்தியது. 1973 ஜனவரி 29 முதல் பிப்ரவரி 2 வரை மாஸ்கோவில் நடந்த கோள் ஆய்வு குறித்த மாநாட்டின் போது ( உலூனா 21 தரையிறங்கிய பின்னர்) ஒரு அமெரிக்க விஞ்ஞானி உலூனா 21 இறங்கும் தளத்தைச் சுற்றியுள்ள நிலா மேற்பரப்பின் புகைப்படங்களை உலூனோகோட் 2 பணிக்கு பொறுப்பான சோவியத் பொறியாளரிடம் வழங்கியதாக சோவியத்து ஒன்றியம் பின்னர் வெளிப்படுத்தியது. அப்பல்லோ 17 தரையிறங்குவதற்கு முன்பு எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் பின்னர் சந்திரனில் அதன் பயணத்தில் புதிய தரையிறங்கியை வழிநடத்த க்லவலவ்ர் குழுவால் பயன்படுத்தப்பட்டன.
- ரேவுத்ல் தேதி / நேரம்: 1973 - 01 - 08 மணிக்கு 06:55:38 ஒபொநே
- வட்டணையில் உலர் பொருண்மை: 4850 கிலோ
தற்போதைய உரிமை
தொகுஉலூனா 21 உலூனோகோட் 2 ஆகியவை 1993 திசம்பரில் நியூயார்க்கில் நடந்த சோதேபியின் ஏலத்தில் இரிச்சர்டு கேரியட் என்பவரால் வாங்கப்பட்டன.
மேலும் காண்க
தொகு- உலூனோகோட் 2
- உலூனோகோட் திட்டம்
- செயற்கை செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளி ஆய்வுகளின் காலவரிசை
- சந்திரனில் உள்ள செயற்கை பொருட்களின் பட்டியல்