உலூயிசு சுட்டோல்பெர்கு

பிரெடெரிக் உலூயிசு சுட்டோல்பெர்கு (Frederikke Louise Stolberg) (1746–1824) ஒரு டென்மார்க் விருந்தோம்புநரும் நாடகசிரியரும் கடித எழுத்து வல்லுனரும் கோள் அறிவியலாளரும் ஆவார். இவருக்கு டென்மார்க், செருமனி சார்ந்த அதிகார வட்டத்தில் சிறந்த அரசியல் செல்வாக்கு இருந்தது. இவர் 1784 கலகத்தில் பங்கேற்றார்.

இவர் மன்னர் கிறித்தியான் தித்லேவ் இரெவென்ட்லோவின் (1710–75) மகள் ஆவார். இவரது தாயார் யோகான்னி பிரெடெரிக் வான் போத்மர் (1718–54) ஆவார்; இவர் 1761இல் கிறித்தியான் பிரெடெரிக் வான் கிராமை (1737–1768) மணந்தார்.[1]

பின் 1777 இல் மன்னர் கிறித்தியான் சுட்டோல்பெர்கை (1748–1821) மணந்தார்). இவரது இரண்டாவது திருமணம் காதல்மணம் ஆகும்மிணையர் இருவரும் ஒருவர் மேலொருவர் கொண்ட காதலால் மணம் செய்துகொண்டு மகிழ்வோடு ஏழ்மையில் குழந்தையின்றி வாழ்ந்தனர். இவர்கள் 1797 வரை ஆயிசுட்டெனில் உள்ள திரெம்சுபூத்தேவில் வாழ்ந்தனர். இங்கு இவரது கணவர் கள ஆட்சியாளராக இருந்தார். இங்கு இவர் செருமனி டென்மார்க் பண்பாட்டு உலகம் எனும் விருந்தோம்பு மாளிகையில் இலக்கிய ஆர்வலர்களைக் குழுமவைத்து விருந்தோம்பினார். இவர் செருமனியிலும் டென்மார்க்கிலும் இருந்த இலக்கிய, அரசியல் உலக முன்னிலை ஆளுமைகளுடன் கடிதத் தொடர்பு வைத்திருந்தார். இவர்களில் கோத்தேவும் ஒருவராவார். இவர் எமில் (1782) எனும் நாடகத்தையும் எழுதியுள்ளார்.

இவர் தன் உடன்பிறப்புகளும் அரசியல்வாதிகளும் ஆகிய கிறித்தியான் தித்லேவ் இரெவென்ட்லோவுக்கும் யோகான் உலூத்விக் இரெவென்ட்லோவுக்கும் அறிவுரை வழங்கி 1784 கலகத்தை ஆயத்தப்படுத்துவதில் பெரும்பங்கேற்றுள்ளார். இந்தக் கலகம் டென்மார்க் ஆட்சியை வீழ்த்தி பென்சுதோர்ப்-இரெவென்ட்லோ-சிம்மைமன் கட்சியை அதிகாரத்தைக் கைப்பற்ற வைத்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. Claus Bjørn. "Stolberg, Frederikke Louise (1746-1824)". Dansk Biografisk Leksikon. பார்க்கப்பட்ட நாள் December 1, 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலூயிசு_சுட்டோல்பெர்கு&oldid=3958498" இலிருந்து மீள்விக்கப்பட்டது