உள்ளியம் (மெய்யியல்)

இருப்பாய்வியல் அல்லது இருப்பியல் என்பது ஒரு பொருள் அது நிலவும் தன்மையை, அதாவது அது இருக்கும் இயல்பு நிலைமையை ஆயும் மெய்யியல் பிரிவு ஆகும். நிலவலை (இருப்பதை) உள்ளபடி அறியும் மெய்யியல் புலம் என்று பொதுவாகக் கூறலாம். இதனை ஆங்கிலத்தில் ஆன்ட்டாலஜி (ontology) என்று 17 ஆவது 18 ஆவது நூற்றாண்டுகளில் இருந்து அழைக்கின்றார்கள். 18 ஆவது நூற்றாண்டில் டாய்ட்சு மொழி பகுத்தறிவியலாளர் கிறிஸ்டியன் வுல்ஃவ் (Christian Wolff) என்பார் இந்த உள்ளதனியல் (நிலவலியல் அல்லது இருப்பியல்) என்னும் கருத்தை முதன்மைப்படுத்தி எழுதி வந்தார். என்றாலும் இம்மானுவேல் காண்ட் என்னும் டாய்ட்சு மொழி மெய்யியலாளர் இந்த இருப்பியல் என்னும் கருத்தின் அடிப்படையில் கடவுள் இருப்புக் கொள்கையை நிறுவ முயல்வதை வன்மையாக எதிர்த்தார்.[1][2][3]

ஆன்ட்டாலஜி என்னும் சொல்லில் உள்ள ஆன்ட்டோஸ் (ontos) என்னும் வேர்ச்சொல் கிரேக்க மொழியில் உள்ளது எதுவோ அது, உள்ளது, இருப்பது அல்லது இயல்பொருள் என்று பொருள்படும். ஆங்கிலத்தில் இதனை "on being", "essence of existence", " what actually is" என்று விளக்கிக் கூறலாம். இக்கருத்தை கி.மு 4 ஆவது நூற்றாண்டிலேயே கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில் என்பவர் முதலடிப்படை மெய்யியலாக முன்வைத்தார்.

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உள்ளியம்_(மெய்யியல்)&oldid=3769166" இலிருந்து மீள்விக்கப்பட்டது