உள்வரைபடம் (கணிதம்)
கணிதத்தில் ஒரு சார்பு இன் உள்வரைபடம் (hypograph (அ) subgraph) என்பது அச்சார்பின் வரைபடத்தின் மீது அல்லது அதற்குக் கீழ்ப்புறமாக அமையும் அனைத்துப் புள்ளிகளின் கணமாகும்.
- சார்பின் திட்டமான உள்வரைபடம் (strict hypograph)
- எனில் உள்வரைபடம் வெற்றுக் கணம்.
இதேபோல, சார்பின் வரைபடத்தின் மீது அல்லது அதற்கு மேற்புறத்தில் அமையும் அனைத்துப் புள்ளிகளின் கணம் அச்சார்பின் வெளிவரைபடம் ஆகும்.
பண்புகள்
தொகு- ஒரு சார்பின் உள்வரைபடம் குவிவுக் கணமாக இருந்தால், இருந்தால் மட்டுமே, அச்சார்பு குழிவுச் சார்பாக இருக்கும்.
- ஒரு சார்பின் உள்வரைபடம் மூடிய கணமாக இருந்தால், இருந்தால் மட்டுமே, அச்சார்பு மேல் அரைத் தொடர்ச்சியான சார்பு.