உள் ஒட்டுச் சதைக்கனி

கல் பழம் (Drupe) என்பது ஒரு உள் ஒட்டுச் சதைக் கனியாகும். இதன் வெளிப்புற சதைப்பகுதி (கனிவெளித்தோல் மற்றும் கனி நடுத்தோல் அல்லது சதைப்பகுதி) ஒரு ஒற்றை ஓடாகும் (குழி, கல் அல்லது பைாின்) கனி உள்தோல் கடினமான விதைப்பகுதியாகவும் மாறியுள்ளது.[1] இவை கனிகள் ஒரு தனிப்பூவின் ஒரு சூலக இலை அல்லது பலசூலக இலைகள் இணைந்து உண்டாகிய தனிச்சூலகத்திலிருந்து மேல்மட்ட சூற்பையிலிருந்து உருவாகிறது. (பாலிபைாினசு கல்பழம் இதற்கு விதிவிலக்கு).

பீச் பழ விளக்கம், பழமும் விதையும் காட்டப்பட்டுள்ளது
கல்பழ வளஎர்ச்சி வரிசைமுறைகள்; 7 12- மாதக் காலத்தில், தொடக்க மாரிக்கால் மொட்டு முதல் நடுக்கோடையில் பழமாகும் வரை

ஒரு உள் ஒட்டு சதைக்கனியின் பண்பு மிகக்கடினமான லிக்கினபைடு, கல் அல்லது குழி பூவின் கருப்பை சுவாிலிருந்து பெறப்படுகிறது. திரள்கனிகளில் ஒவ்வொரு கனியும் ஒரு உள் ஒட்டு சதைக்கனியாகும். (ராஸ்பொிபோன்றவை) இது ட்ருப்லெட் எனவும் மொத்தமாக சோ்த்து பொி எனவும் அழைக்கப்படுகிறது.

மற்ற சதைப்பற்றுள்ள பழஙகளில் விதையைச் சுற்றி கடினமான விதைத்தோல் காணப்படுகிறது. இவ்வைகயான கனிகள் உண்மையான உள் ஒட்டு சதைகனிகள் அல்ல. உள் ஒட்டு சதைக்கனிகளை உருவாக்கும் சில பூக்கும் தாவரங்கள் காபி, இலந்தை, மாம்பழம், ஆலிவ், பிஸ்தா, சப்போட்டா, பெரும்பாலான பனைக்குடும்ப தாவரங்கள் (தேங்காய், போிச்சை பனை போன்றவை) பாதாம் (கனி நடுத்தோல் தோல்போன்றது) செர்ரி, பிளம், ஏப்ரிக்காட் முதலியன ஆகும். ட்ருபேசியஸ் என்ற வாா்த்தை உள் உட்டு சதைக்கனிகள் உடைய கனிகளுக்கு பொருந்தும்.[2] எனினும் முற்றிலும் பொருந்தாது.

காட்சிமேடை

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Stern, Kingsley R. (1997). Introductory Plant Biology (Seventh ed.). Dubuque: Wm. C. Brown. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-114448-X.
  2. Kiger, Robert W. & Porter, Duncan M. (2001). "Find term 'drupaceous'". Categorical Glossary for the Flora of North America Project. பார்க்கப்பட்ட நாள் 2015-08-14.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உள்_ஒட்டுச்_சதைக்கனி&oldid=3913089" இலிருந்து மீள்விக்கப்பட்டது