உழக்கு என்பது பாய்மப் பொருள்களின் கொள்ளளவை அளப்பதற்குத் தமிழர்கள் பயன்படுத்தும் முகத்தலளவை அலகுகளில் ஒன்றாகும். சில நேரங்களில் பண்டங்களை அளப்பதற்கும் உழக்கு பயன்படுத்தப்படுகிறது. உலக அளவை முறையில், ஒரு உழக்கின் அளவு 336 மி. லி ஆகும்.

உழக்கு

உழக்கு (பாத்திரம்) என்பது ஒரு உழக்கு அளவுள்ள பாத்திரத்தையும் குறிக்கும். இந்த பாத்திரத்தைப் பித்தளை வார்ப்பிரும்பு மற்றும் ஈயத்தில் செய்திருப்பார்கள். இந்த உழக்கை நீர், பால், எண்ணெய் போன்ற பாய்மப் பொருள்களை அளப்பதற்கும் நெல், அரிசி, உளுந்து போன்ற தானியங்களை அளப்பதற்கும் பயன்படுத்துவார்கள்.

பண்டையத் தமிழர் பயன்படுத்திய முகத்தல் அளவைகள்:

உழக்கு

முகத்தல் வாய்ப்பாடு

தொகு

5 செவிடு = 1 ஆழாக்கு
2 ஆழாக்கு = 1 உழக்கு
2 உழக்கு = 1 உரி
2 உரி = 1 படி அல்லது நாழி
8 படி = 1 மரக்கால் (குறுணி)
2 குறுணி = 1 பதக்கு
2 பதக்கு = 1 தூணி

இவ்வாய்ப்பாட்டின் படி:

1 உழக்கு

=10 செவிடு
=2 ஆழாக்கு
=1/2 உரி
= 1/4 படி
= 1/16 மரக்கால் ஆகும்.

மேற்கோள்கள்

தொகு

வித்துவான் வை. சுந்தரேச வாண்டையார், முப்பது கல்வெட்டுக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=உழக்கு&oldid=3063407" இலிருந்து மீள்விக்கப்பட்டது