உழத்தியர் பெயர்கள் (முக்கூடற்பள்ளு)

முக்கூடற் பள்ளு என்னும் நூலில் [1] நாற்று நடும் உழத்தியர் பெயர்கள் பாட்டு ஒன்றில் அடுக்கிக் கூறப்பட்டுள்ளன.
உழத்தியை இந்த நூல் ‘பள்ளி’ என்று குறிப்பிடுகிறது.
அவை தனித்தமிழ்ப் பெயர்களாக உள்ளன.
அந்தப் பெயர்கள் இங்கு அகர வரிசைப்படுத்தித் தரப்படுகின்றன.

உழத்தியர் பெயர்கள் [2]தொகு

அங்காளி
அணைஞ்சி
அம்மச்சி
அருதி
அழகி
அன்னம்
ஆலி
இருவி
உடைச்சி
எல்லி
எழுவி
கரும்பி
கலிச்சி
கள்ளி
கன்னி
காத்தி
காமி
குருந்தி
சடைச்சி
சாத்தி
சின்னி
சுந்தி
செம்பி
செல்லி
சேவி
தம்பிச்சாள்
திருவி
நல்லி
நன்னி
நாகி
நாச்சி
நூவி
பாலி
புலிச்சி
பூமி
பூலி
பூவி
பெரிச்சி
பேச்சி
பொதுவி
பொன்னி
போகிலாள்
மருதி
மூக்கி
வம்பி
வெழுதி
வேம்பி
வேலி

மேற்கோள்தொகு

 1. முக்கூடற் பள்ளு , பொருளுரை, விளக்கவுரையுடன், உரையாசிரியர் : ந. சேதுரகுநாதன், திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், வெளியீடு, 1/140, பிரகாசம் சாலை, சென்னை-1, 1973
 2. * பாடல்

  சிந்து
  இராகம்: மோகனம்.
  தாளம்: அடதாளம்.

  சின்னி குருந்தி அருதி மருதி
  செல்லி இருவி எல்லி கலிச்சி
  திருவி அணைஞ்சி வெழுதி பெரிச்சி
  செம்பி வம்பி தம்பிச்சாள்
  நன்னி உடைச்சி சடைச்சி மூக்கி
  நல்லி பூலி ஆலி வேலி
  நாச்சி பேச்சி சுந்தி எழுவி
  நாகி போகி லாள்
  பொன்னி அழகி நூவி சேவி
  பூவி சாத்தி காத்தி அம்மச்சி
  பூமி காமி வேம்பி கரும்பி
  புலிச்சி அங்காளி
  கன்னி பொதுவி அன்னம் பாலி
  கள்ளியுங் கலந் தொருவர்க் கொருவர்
  கைவிரசலாய் நடுகைச் சமர்த்தைக்
  காட்டும் பள்ளீரே.