உழபுல வஞ்சி

தமிழ் இலக்கணத்தில் உழபுல வஞ்சி என்பது புறப்பொருள் திணைகளுள் ஒன்றான வஞ்சித் திணையின் ஒரு துறை அல்லது உட்பிரிவு ஆகும். போரில் வென்ற தரப்பினர் எதிரி நாட்டின் ஊர்களை எரியூட்டுவது பற்றிக் கூறுவது இத்துறையுள் அடங்கும். ஊர்களை எரியூட்டுவதன் மூலம் பகை நாட்டைத் துன்பத்தில் உழலச் செய்வதால் இது "உழபுல வஞ்சி" என்று பெயர் பெற்றிருக்கலாம்.

இதனை விளக்க, பொருந்தாதாருடைய வளம் பொருந்திய தேசத்தை மிக்க நெருப்பைக்கொண்டு கொழுத்தியது[1] என்னும் பொருள்படும் பின்வரும் பாடல் புறப்பொருள் வெண்பாமாலையில் வருகிறது.

நேராதார் வளநாட்டைக்"
கூரெரி கொளீ இயன்று

எடுத்துக்காட்டு

தொகு
அயிலன்ன கண்புதைத் தஞ்சி யலறி
மயிலன்னார் மன்றம் படரக் - குயிலகவ
ஆடிரிய வண்டிமிரும் செம்மல் அடையார்நாட்டு
ஓடெரியுள் வைகின ஊர்
- புறப்பொருள் வெண்பாமாலை 46.

குறிப்பு

தொகு
  1. இராமசுப்பிரமணியன், வ. த., 2009. பக். 79

உசாத்துணைகள்

தொகு
  • இராமசுப்பிரமணியன், வ. த., புறப்பொருள் வெண்பாமாலை, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 2009.
  • கௌரீஸ்வரி, எஸ். (பதிப்பாசிரியர்), தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணனார் உரை, சாரதா பதிப்பகம், சென்னை, 2005.

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உழபுல_வஞ்சி&oldid=1551230" இலிருந்து மீள்விக்கப்பட்டது