உழவாரப் பணி
உழவாரப் பணி என்பது வழிபாட்டு ஆலயங்களில் தன்னார்வலர்கள் தூய்மைப் பணியில் ஈடுபடுதலைக் குறிக்கிறது. பொதுவாக சைவ சமயத்திலேயே இச் சொல் பயன்படுத்தப்படுகிறது. உழவாரப் படை என்பது உழவாரப்பணியில் உதவும் இரும்புக் கருவியாகும். சைவ சமயக்குரவரர் நால்வருள் ஒருவரான திருநாவுக்கரசர்,
“ | என் கடன் பணி செய்து கிடப்பதே | ” |
என உழவாரப் பணியையே தலையாய பணியாகச் செய்தவர் ஆவார்.
தமிழகத்தில் பல்வேறு உழவாரப்பணி மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.