உழுந்தினைம் புலவர்

உழுந்தினைம் புலவர் என்பவர் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல் ஒன்றே ஒன்று இடம்பெற்றுள்ளது. அது குறுந்தொகை 333 எண் கொண்ட குறிஞ்சித் திணைப் பாடல்.

உழுந்தின் ஐம்புலவர் என்று இவரது பெயரைப் பிரித்துக் காணும்போது இப் புலவரின் பெயர் விளக்கம் புலப்படும். 'ஐ வியப்பு ஆகும்' என்பது தொல்காப்பியம். அரைத்து வைத்தால் மிகுதியாகப் பொங்கும் பயிர் உழுந்து. அதுபோல் தானே உள்ளுணர்வு பொங்கிப் புலவரானவர் இவர்.

பாடல் சொல்லும் செய்தி

தொகு

தோழி தலைவியிடம் சொல்கிறாள். அவன்(தலைவன்) வருத்தத்தைப் போக்க நாம் துணிந்தால் என்ன? (தாயிடம் சொல்லித் திருமணத்துக்கு முயலலாமே என்பது கருத்து)

கானவன் அம்பெய்து யானை ஓட்டுவான். மகளிர் கிளி ஓட்டுவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உழுந்தினைம்_புலவர்&oldid=3177994" இலிருந்து மீள்விக்கப்பட்டது