உவர் நிலம்
உவர் நிலம் (Dryland salinity) என்பது உவர்ப்புத் தன்மையை கொண்ட நிலத்தைக் குறிக்கும். ஒரு சில இடங்களில், நிலங்களுடன் உப்புத்தன்மையுள்ள நீர்வளங்களையும் உவர் பிரதேசம் என்று கூறுவார்கள். இது போன்ற உவர் நிலங்கள், உவர் நீர் நிலைகளை பல நாடுகளில் காணலாம். இப்படியான பிரதேசங்கள் கடற்கரைக்கு அருகில்தான் இருக்கும் என்பது சொல்ல முடியாது, ஒரு நாட்டின் நிலப்பரப்புகளுக்கு நடுவில் கூட இப்படியான உவர் நிலங்களைக் காணலாம்.
மண்ணில் குளோரைடு மற்றும் சல்பேட் உப்புகள் அதிகமாக இருப்பதால் உவர் நிலம் ஏற்படுகிறது.உவர் நிலங்களில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும், அவற்றின் செயல் திறனும் குறைந்து காணப்படும். பொதுவாக இந்நிலங்களில் பயிர் விதைகள் முளைக்க முடியாமல் போய்விடுகிறது. பூமியில் காணப்படும் நீரில் கரைந்துள்ள உப்புக்கள் அதிக அடர்த்தியாக இருப்பதால் உவர் நிலங்களில் பயிரிகளின் வேர்களால் நீரை ஈர்க்க வலுவில்லாமல் இறுதியில் பயிர் வாடி விடுகிறது. இவை மண்ணிலுள்ள மற்றும் பாசன நீரில் உள்ள உப்புக்களால் ஏற்படுகிறது.[1]
மேற்கோள்
தொகு- ↑ "பசுமை இந்தியா வலைதளம்". Archived from the original on 2012-06-25. பார்க்கப்பட்ட நாள் 2012-09-08.