உஷா சங்வான்
உஷா சங்வான், இந்தியாவின், பஞ்சாப்பைச் சேர்ந்தவரும் இந்திய அளவில், வணிக உலகில் மிகுந்த செல்வாக்கு மிக்க, பெண் வணிகத் தலைவருமாவார். 2013 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை ஆசியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் முதல் பெண் நிர்வாக இயக்குநராக (MD) பணியாற்றியுள்ளார். அவரது ஓய்வுக்கு பின்னதாக தற்போதும் அந்நிறுவனத்தின் சுதந்திர இயக்குநராக பணியாற்றிவருகிறார். மேலும் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கூடுதல் மற்றும் சுயாதீன இயக்குனராக, 20 மார்ச் 2023 அன்று நியமித்துள்ளது.[1] [2]
உஷா சங்வான் | |
---|---|
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் முதல் பெண் நிர்வாக இயக்குனர் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1958 (அகவை 65–66) பஞ்சாப், இந்தியா |
தேசியம் | இந்தியா |
சுயவிவரம்
தொகுஉஷா சங்வான், 1958 ஆம் ஆண்டில் பஞ்சாபின் சோனாலிகா குழுமத்தின் நிறுவனர் [3] லக்ஷ்மண் தாஸ் மிட்டல் மற்றும் ராஜ் ராணி மிட்டல் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தவர். சண்டிகரில் உள்ள அரசு மாதிரி நடுநிலைப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியை முடித்துள்ள இவர், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில், பொருளாதாரம் மற்றும் மனித வளத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். இந்திய காப்பீட்டு நிறுவனத்தில் உரிமம் பெற்றதோடு, லக்னோவில் உள்ள இந்திய மேலாண்மை கழகத்தில் (ஐஐஎம்) வணிக நிர்வாகத்தில் மேலாண்மைப் படிப்பையும் முடித்துள்ளார். ஓய்வுபெற்ற வருமான வரித்துறையின் தலைமை ஆணையரான நரேந்தர் சங்வானைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். இத்தம்பதியருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். [4]
தொழில்
தொகு1981 ஆம் ஆண்டில் தனது இருபத்திமூன்றாவது வயதில் இந்திய ஆயுட்காப்பீட்டுக்கழகத்தில் சேர்ந்து, அதன் பல்வேறு துறைகளில் முப்பத்து ஏழு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். முன்னதாக எல்ஐசியின் துணை நிறுவனமான வீட்டுக்கடன் வசதி நிறுவனத்தையும் அவர் தலைமையேற்று கையாண்டுள்ளார். 2004 ஆம் ஆண்டில் உலகளாவிய டெபாசிட்டரி ரசீதுகள் மூலம் $29.85 மில்லியனை திரட்டி இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தியதில் முக்கியப் பங்கு வகித்துள்ள இவர், சந்தைப்படுத்தல் மற்றும் எழுத்துறுதி பிரிவுகளை பிரித்து, ஆபத்து அடிப்படையிலான விலையை அறிமுகப்படுத்தியுள்ளார். [4] இவரது ஓய்வுக்குப் பிறகு, டோரண்ட் பவர், கோத்ரேஜ் வீட்டுக்கடன் வசதி நிறுவனம் மற்றும் ட்ரைடென்ட் இந்திய குழுமம் ஆகியவற்றின் சுயாதீன இயக்குநர்கள் குழுவில் பணியாற்றியுள்ள உஷா, ஆக்சிஸ் வங்கியில் பெரிய நிதி கண்காணிப்பு குழுவில் உறுப்பினராகவும் இயக்குனராகவும் இருந்து வருகிறார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Life Corporation on India. "Members On The Board Of The Corporation". Life Corporation on India, Official Website. Archived from the original on நவம்பர் 9, 2013. பார்க்கப்பட்ட நாள் November 9, 2013.
- ↑ Livemint (2023-03-20). "Tata Motors appoints Usha Sangwan as Additional Director, Independent Director". mint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-22.
- ↑ "Forbes India Magazine - Lachhman Das Mittal: Tractor master". Forbes India (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2016-12-11.
- ↑ 4.0 4.1 "Arundhati Bhattacharya to Archana Bhargava: A look at women achievers in PSU banks". The Economic Times. October 16, 2013. பார்க்கப்பட்ட நாள் November 9, 2013.