உஷா செளமார்

உஷா செளமார்  என்ற பெண்மணி ஒரு சமூக சேவகர். இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்.

உஷா சௌமார்
பிறப்புஉஷா செளமார் (வயது 53)
இந்தியா, ராஜஸ்தான்
தேசியம் இந்தியர்
அறியப்படுவதுசமூக சேவை

தற்போது சுலாப் சர்வதேச சமூக சேவை அமைப்பின் தலைவராக இருக்கும் உஷா செளமருக்கு இந்த ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

சமூக சேவைதொகு

அடிப்படையில் இவர் ஒரு துப்புரவு தொழிலாளியாக இருந்த  உஷா, பிறகு அப்பளம், ஊறுகாய், நூடுல்ஸ் போன்ற உணவுப் பொருட்களைச் செய்யும் தொழிலில் ஈடுபட்டார்.

மனிதத் தன்மை இல்லாத துப்புரவு தொழிலில் இருந்து விடுபட்டு கெளரவமான தொழிலை தான் கற்றுக் கொண்டது மட்டும் மல்லாமல் தன்னைப் போன்ற பிற பெண்களுக்கும்  சுயமுன்னேற்த்திற்கு வழிகாட்டுபவராக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக சேவையாக செய்து வருகிறார்.

பத்மஸ்ரீதொகு

இவருக்கு 2020 ம் ஆண்டுக்கான, நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது  வழங்கப்பட்டிருக்கிறது.[1]

குறிப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உஷா_செளமார்&oldid=2943491" இருந்து மீள்விக்கப்பட்டது