உஷா பிரகாஷ் சௌதாரி (Usha Choudhari)(பிறப்பு 1942) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியினை சேர்ந்தவரும் ஆவார். இவர் மகாராட்டிர மாநிலம் அமராவதி மக்களவைத் தொகுதியிலிருந்து இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். உஷா சௌதாரி நூற்றுக்கணக்கான கவிதைகளை எழுதி வெளியிட்டுள்ளார்.

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

உஷா 22 பிப்ரவரி 1942-ல் மகாராட்டிரம் அமராவதியில் பிறந்தார். உஷா சௌதாரி பள்ளிக் கல்வியை முடித்த பிறகு, சிறீ சிவாஜி கல்வியியல் கல்லூரியில் இளங்கல்வியியல் கல்வி பயின்றார். இவர் கலை மற்றும் கல்வியியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.[1]

பணி தொகு

உஷா சௌதாரி 1975ஆம் ஆண்டு அமராவதி மாவட்ட மணிலா கூட்டுறவு வங்கியின் தலைவரானார். 1980 இந்தியப் பொதுத் தேர்தலில் அமராவதி மக்களவைத் தொகுயில் இந்தியத் தேசிய காங்கிரசின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் நாடாளுமன்றத்தின் அரசாங்க உத்தரவாதங்களுக்கான குழுவிலும் (1980-82) மதிப்பீட்டுக் குழுவிலும் உறுப்பினராக (1982-84) பணியாற்றினார்.[1]

கொல்கத்தாவில் உள்ள உலக மேம்பாட்டுப் பாராளுமன்ற நிறுவனம் 1984-ல் இவருக்கு பாரத் சமாஜ் உன்னியன் ரத்னா பட்டம் வழங்கி கௌரவித்தது. இதே ஆண்டு, உஷா சௌதாரி மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இருப்பினும், இவர் 1989 தேர்தலில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் சுதம் தேஷ்முக்கிடம் தோற்றார்.[2] சௌதாரி ஒரு கவிஞரும் ஆவார். இவரது நூறு கவிதைகள் பல்வேறு பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளன.[1]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

சனவரி 1959-ல், உஷா சௌதாரி, சிறீ பிரகாஷ் சவுதாரியை மணந்தார். இவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Members Bioprofile: Choudhari, Shrimati Usha". மக்களவை (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 27 November 2017.
  2. "Amravati Partywise Comparison". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 27 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உஷா_சௌதாரி&oldid=3743842" இலிருந்து மீள்விக்கப்பட்டது