உஷா மெஹ்ரா ஆணைக்குழு

உஷா மெஹ்ரா ஆணைக்குழு, இந்த ஆணைக்குழு டிசம்பர் 2012 ஆம் ஆண்டு இந்திய அரசால் அப்போதைய முதன்மை அமைச்சர் மன்மோகன் சிங் அவர்களால் நியமிக்கப்பட்ட தனி நபர் விசாரணை ஆணைக்குழு ஆகும். உஷா மெஹ்ரா என்பவர் ஓய்வு பெற்ற டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்தவர்.

  • இந்த ஆணைக்குழு டிசம்பர் 2012 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற பாலியல் வன்முறை சம்பவம் பற்றியும், அதைத் தடுக்கத் தவறியதில் தில்லி காவலரின் பங்கு குறித்தும் விசாரணை நடத்தும் மேலும் பெண்களின் பாதுகாப்புக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மத்திய அரசுக்கு பரிந்துரைக்க ஏற்படுத்தப்பட்டது.
  • இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகள் பெப்ரவரி 2013 ஆம் ஆண்டு மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் சில. டெல்லி காவல்துறையினருக்கும், போக்குவரத்து துறையினருக்கும் ஒருங்கிணைப்பு இல்லாததும், டெல்லி காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கும் பொது போக்குவரத்திற்கும் ஒருங்கிணைப்பு இல்லாததும், தேசிய தலைநகர் பகுதியில் நிலவிய குழப்பமின்மையை பயன்படுத்தி குற்றவாளிகள் ஒரு இடத்திலிருந்து, மற்றோர் இடத்திற்கு தப்பி செல்கின்றனர் எனவும் கூறுகிறது.

வெளியிணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உஷா_மெஹ்ரா_ஆணைக்குழு&oldid=1903231" இலிருந்து மீள்விக்கப்பட்டது