ஊசி பாறை காட்சி முனை

தமிழ்நாட்டின் சுற்றுலாத்தலம்

ஊசி பாறை காட்சி முனை (Needle Rock View Point) என்பது தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் என்னும் ஊரிலூள்ள ஒரு சுற்றுலாத்தலம் ஆகும். கூடலூர் மேற்கு ஊட்டியின் 51 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஊசி பாறை காட்சி முனை கூடலூரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் கூடலூர் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலை -67 இல் அமைந்துள்ளது. இக் காட்சி முனை 360 டிகிரி பார்வை அளிக்கக்கூடியது. இந்த காட்சி முனை ஊசி மாலை என்றும் அழைக்கப்படுகிறது. அதன் கூம்பு வடிவத்திலிருந்து ஊசி மாலை என்ற பெயர் வழங்கப்பட்டது. ஊசி மாலை என்ற பெயர் தமிழ் மொழியிலிருந்து அளிக்கப்பட்டது. ஊசி என்பது கூர்மையான முனையைக் குறிக்கும், மாலை என்பது மலையைக் குறிக்கும். [1][2][3][4]

panoramic view

தமிழ்த் திரைப்படங்களில் படப்பிடிப்பு காட்சிகளில் இவ்விடம் அமைந்துள்ளது. ஊசி பாறை காட்சி முனை "சின்ன பூவே மெல்ல பேசு" என்ற தழிழ் திரைப்படத்தில் பிரபலமானது.

மேலும் பார்க்கவேண்டியவை

தொகு
 முதுமலை தேசியப் பூங்கா
 கூடலூர்
 பைக்காரா ஆறு

மேற்கோள்கள்

தொகு
  1. "NEEDLE ROCK POINT". tamilnadutourism.org. பார்க்கப்பட்ட நாள் Sep 29, 2011.
  2. "GUDALUR". www.nilgiris.tn.gov.in. 
  3. "Needle Rock Point". filmapia.com. பார்க்கப்பட்ட நாள் Sep 29, 2011.
  4. "ABOUT MUNICIPALITYt". municipality.tn.gov.in/. Archived from the original on 2011-08-10. பார்க்கப்பட்ட நாள் Sep 30, 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊசி_பாறை_காட்சி_முனை&oldid=4169512" இலிருந்து மீள்விக்கப்பட்டது