ஊடகச் சுதந்திர சுட்டெண்

ஊடக சுதந்திர சுட்டெண் என்பது ஒரு நாட்டில் ஊடகங்கள் எந்த அளவுக்கு சுதந்திரமாக இயங்குகின்றது என்பது பற்றிய ஒரு அளவீடு ஆகும். இது உலகெங்கும் இயங்கும் 14 அமைப்புகள், 130 ஊடகவியாளர்கள், இதர ஆய்வாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகியோரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அமைந்தாகும். இந்த மதிப்பீட்டை எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு வெளியிடுகிறது. இந்த அறிக்கையில் மிகச் சிறிய நாடுகள் தவிர்த்து 173 நாடுகள் பற்றி தகவல் இடம்பெறுகிறது. ஆகச் சிறந்த நாடுகளாக அயலார்ந்து, நோர்வே, கனடா போன்ற நாடுகள் இடம்பெறுகின்றன. மிகவும் மேசமான நாடுகளாக ஈரான், வட கொரியா, சீனா, பார்மா, இலங்கை (165) ஆகிய நாடுகள் இடம்பெறுகின்றன.[1] இந்தியா ஒரு இடைப்பட்ட நிலையான 118 ஆம் இடத்தில் உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. en:Reporters Without Borders#Worldwide Press Freedom Index
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊடகச்_சுதந்திர_சுட்டெண்&oldid=2744821" இலிருந்து மீள்விக்கப்பட்டது