ஊண்வினைகள்

ஊண்வினைகள் என்பது உணவைச் சாப்பிடும் வகைகள் ஆகும். உண்ணும் செயல் ஒவ்வொரு முறைக்கும் தனித் தனி சொல்லாடல் தமிழில் உள்ளது. அந்த ஊண் வினைகள் பின்வருமாறு தமிழில் உள்ளன.[1][2]

  • உறிதல், உறிஞ்சுதல்--நீர்ப்பொருளையும் நெகிழ்ச்சிப் பொருளையும் காற்றால் வாய்க்குள் இழுத்தல்.
  • குடித்தல் --நீர்ப் பொருளை இயல்பாக உட்கொள்ளுதல்.
  • பருகுதல்--நீர் ஏனத்தில் பல் படக் குடித்தல்.
  • அருந்துதல்--கொஞ்ச கொஞ்சமாகக் குடித்தல்.
  • மண்டுதல்--மண்டியுட்படக் குடித்தல்.
  • மாந்துதல் ---பெரிய அளவில் குடித்தல்.
  • சப்புதல்--உணவை மெல்லாமல் நாவிற்கும் அண்ணத்திற்கும் இடையில் வைத்து அதன் சாற்றை உறிஞ்சுதல்.
  • சுவைத்தல்--ஒன்றை மென்று அதன் சுவையை நுகர்தல்.
  • சவைத்தல்--குழந்தை தாய்ப் பாலைச் சப்புதல்.
  • சூம்புதல் சூப்புதல்--விரலை வாயில் வைத்துச் சப்புதல்.
  • தின்னுதல்--பழம் பண்ணியம் போன்ற சிற்றுண்டியை மென்று உட்கொள்ளுதல்.
  • உண்ணுதல்--கவளமாகச் சோற்றை உட்கொள்ளல்
  • சாப்பிடுதல்--சோற்றைக் கறி வகைகளுடன் குழம்பு சாறு மோர் இட்டுக் கலந்து உட்கொள்ளல்.
  • மடுத்தல், வாய்மடுத்தல்--கவளம் கவளமாகப் பிறர் ஊட்டுதல்.
  • அசைத்தல் --விலங்கு அசை போடுவதுபோல் அலகை அசைத்து மென்று உட்கொள்ளல்.
  • அயிலுதல் ==குழந்தை அளைந்து சோற்றை உண்ணுதல்.
  • கப்புதல் -- வாய் நிறைய வைத்து மெல்லுதல்.
  • மிசைதல்--விருந்தினரைச் சாப்பிடவைத்து மிஞ்சியதை உண்ணுதல்.
  • மொசித்தல்--பலர் ஒன்று கூடி உண்ணுதல்.
  • ஆர்தல்--வயிறு நிரம்ப உண்ணுதல்.
  • விழுங்குதல்--மெல்லாமல் சுவைக்காமல் வாய் வழியாக வயிற்றுக்குள் இடுதல்.

சான்று

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊண்வினைகள்&oldid=2747507" இலிருந்து மீள்விக்கப்பட்டது