ஊதுகுழல் ஈக்கள் பளபளக்கும் நீலம் அல்லது பச்சை நிறத்தோற்றத்தில் முதுகும் கழுத்துப் பகுதியும் அமைந்திருக்க சிவப்ப கலந்த கருப்பு நிறக் கண்களோடு காணப்படுகின்றன. கருப்பு கலந்த நீலநிற உடலை ஊதுகுழல் ஈக்கள் பெற்றுள்ளன. ஊடுருவும் தன்மையில் இறகுகளையும் சிறு உணர் கொம்புகளையும் பெற்றுள்ளன. வீட்டு ஈயின் அளவை விடச் சற்று பெரியதாக வளரும் இவ்வகை ஈக்கள் பூக்கள் நிறைந்த தாவரங்களிடையே காணப்படும்.

கழிவுகள் நிறைந்த பகுதிகளில் இதனுடைய புழுக்கள் வளரும் இயல்பை பெற்றுள்ளன. காடுகள், புல்வெளிகள், விளைநிலங்கள் பிற பரவலான இடங்களில் ஊதுகுழல் ஈக்களை காணலாம்.

ஊதுகுழல் ஈக்கள் உலகளவில் சுமார் 188 குடும்பங்களாகவும் இந்திய அளவில் சுமார் 96 குடும்பங்களாகவும் பரவியுள்ளன.[1]

மேற்கோள்கள் தொகு

  1. புத்தகம்: பூச்சிகள் ஓர் அறிமுகம், ஆசிரியர்: ஏ. சண்முகானந்தம், பதிப்பகம்: வானம், முதற் பதிப்பு: 2017 சனவரி, பக்கம்: 19
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊதுகுழல்_ஈ&oldid=3721342" இலிருந்து மீள்விக்கப்பட்டது