ஊத்தங்கரை ஆஞ்சனேயர் திருக்கோயில்

ஊத்தங்கரை ஆஞ்சனேயர் திருக்கோயில் என்பது தமிழ்நாடு, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை நகரில், நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் ஆஞ்சனேயர், விநாயகர், ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகளும், தென் புறத்தில் நாகர் சன்னதியும் அமைந்துள்ளன. கோயிலின் முன்பக்கம் தியான மண்டபம் உள்ளது. அதில் ஹயக்கிரீவர், இராமர், இலட்சுமனர், ஆஞ்சனேயர், இராமாநுஜர் ஆகியோருக்கு உர்ச்சவர் சிலைகள் உள்ளன.

மணிமண்டபம் தொகு

இக்கோயிலின் முன்பக்கம் பெரிய மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது, இங்கு சிறப்பு சொற்பொழிவுக் கூட்டங்களும், சுவாமிக்கான சிறப்பு யாகங்களும் நடத்தப்படுகிறது. பூசைகள் இக்கோயிலில் சனிக்கிழமை பூசைகள் வெகு சிறப்பு, மேலும் அனுமன் ஜெயந்தி அன்று ஆஞ்சனேயருக்கு 100 லிட்டர் பாலில் அபிசேகம் செய்து சிறப்பு பூசைகள் நடைபெறும். மேலும் அன்றைய தினம் சுவாமி திருவீதி உலாவும் நடைபெறும். சிறப்பு யாகங்கள் இக்கோயிலில் ஆண்டுதோறும் மாணவர்களின் கல்வி நலனுக்காக ஸ்ரீ ஹயக்கிரீவர் யாகம் நடத்தப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான மாணவர்களும், பொது மக்களும் கலந்துக்கொள்வர்.

மேற்கோள்கள் தொகு