ஊமைக்கருமியண்ணன்

ஊமைக்கருமியண்ணன் (Umaikkarumiyannan), கொங்கு நாட்டின் கொங்கு வேளாளர் கூட்டங்களில் காடை குல [1] மக்கள் தெய்வங்களில் ஒன்றாகும். இவர் நாமக்கல் மாவட்டம், தோளூர் கிராமத்தில் கோயில் கொண்டுள்ளார்.

அருள்மிகு ஊமைக்கருமியண்ணன் திருக்கோவில், தோளூர்

கோவிலில் உடன் அமைந்த தெய்வங்கள்

தொகு

விநாயகர், கன்னிமார் சுவாமிகள், கருமியண்ணன் சுவாமி, ஊமைக்கருமியண்ணன் சுவாமி, நல்லேந்திரர் சுவாமி, தங்காயி-பெரியக்காண்டியம்மன், சின்னண்ணன்-பெரியண்ணன் (அண்ணமார் சுவாமிகள்).

கோவிலில் பூஜை முறைகள்

தொகு

முதலில் அனைத்து சுவாமிகளுக்கும் படையல்கள் வைக்கப்பட்டு, இதில் ஊமைக்கருமியண்ணன் சுவாமிக்கு மட்டும் தேங்காயை உடைக்காமல் படைக்கப்படும். பூசாரி பூஜையை தொடங்கும் முன் தன் முகத்தினை துணியினால் கண்கள் மட்டும் தெரியும்படி கட்டிக்கொண்டு பூஜையினைத் தொடங்கி முறையே மேலே குறிப்பிட்ட தெய்வங்கள் வரிசைப்படி பூஜை செய்வார்கள்.

 
ஊமைக்கருமியண்ணன் குதிரை வாகனம்
 
குதிரை வாகனம்

சுவாமியின் வாகனம்

தொகு

சுவாமிகளின் வாகனம் குதிரை ஆகும். இவ்வாகனம் கருமியண்ணன் சுவாமியை வணங்கியபடி நிற்கும். மேலும் மாற்றொரு குதிரை வாகனம் பின்புறம் அமைந்துள்ளது இவ்வாகனதில் திருவிழாக்காலங்களில் சுவாமி ஊர் பவனி வருவார்கள்.

  1. கொங்கு வேளாளர் கூட்டங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊமைக்கருமியண்ணன்&oldid=3490093" இலிருந்து மீள்விக்கப்பட்டது