ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கீழப்பாலையூர்

'ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கீழப்பாலையூர் (Panchayat Union Middle School, Keezhapalaiyur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கடலூர் மாவட்டம், கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது. கீழப்பாலையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 110 மாணவர்கள் படிக்கிறார்கள். முப்பது கணினிகளுடன் அதி நவீன ஆய்வகம்; குளிர்சாதன வசதி செய்யப்பட்ட வகுப்பறைகள், வகுப்பறைகளில் திரும்பிய பக்கமெல்லாம் வண்ணமயமான அழகான சுவரோவியங்கள், தூய்மையான அதிநவீன கழிவறை என பன்னாட்டு தரத்துடன் பள்ளி செயல்படுகிறது.[1]

வரலாறு தொகு

தொடக்கத்தில் கீழப்பாலையூரரில் தொடக்கப் பள்ளி மட்டுமே இருந்தது. இங்குள்ளவர்கள் 5-ஆம் வகுப்பை முடித்து விட்டு 6-ஆம் வகுப்பில் சேர 6 கி.மீ.தொலைவில் உள்ள கம்மாபுரம் செல்ல வேண்டும். மணிமுத்தாறு தண்ணீரைக் கடந்து சென்றுதான் பள்ளிக்கு செல்ல முடியும். பருவமழைக் காலங்களில் ஆற்றில் வேகமாக தண்ணீர் ஓடும். ஆகவே, அந்த நாட்களில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல மாட்டார்கள். ஆற்றை கடப்பது ஆபத்தானது என்பதால் இங்குள்ள பெரும்பாலான மாணவர்கள் 5-ஆம் வகுப்புக்கு மேல் படிப்பதில்லை. நடுநிலைப் பள்ளி தொடங்க வேண்டும் என்று கிராம மக்கள் நீண்ட காலமாகப் போராடி வந்தனர். இதனால் 2012-ஆம் ஆண்டில் கீழப்பாலையூர் பள்ளி ஒரு நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

பள்ளியின் வசதிகள் தொகு

  • குளிர்சாதன வசதி கொண்ட இரண்டு வகுப்பறைகள்
  • வட்ட மேசைகள் கொண்ட தொடக்கப்பள்ளி வகுப்பறைகள்
  • நவீன வசதிகள் கொண்ட இரண்டு கழிப்பிடங்கள்
  • தொடுதிரை தொழில்நுட்ப வசதி
  • வண்ண ஓவியங்கள் நிரம்பிய சுற்றுச்சுவர்

மேற்கோள்கள் தொகு

  1. "30 கம்ப்யூட்டர்கள்; 2 ஏ.சி. வகுப்பறைகள்: ஹைடெக் வசதிகளுடன் இயங்கும் குக்கிராமப் பள்ளி". Hindu Tamil Thisai. 2017-06-12. பார்க்கப்பட்ட நாள் 2023-05-12.