ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சேத்துக்குழி

சேத்துக்குழி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், கொளத்தூர் ஒன்றியம், சேத்துக்குழிக் கிராமத்தில் அமைந்துள்ளது. ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி 1965 ல் தொடங்கப்பட்டது. 2004-2005 ம் ஆண்டு நடுநிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. பள்ளியைச் சுற்றிலும் மேட்டூர் அணை நீர்சூழ்ந்த நிலையில் பார்ப்பதற்கு அழகான சூழலில் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. இப்பள்ளியில் மாணவர்களுக்குத் தரமான முறையில் கல்வி வழங்கப்படுகின்றது.

அமைவிடம்

தொகு

சேத்துக்குழிக் கிராமம் மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.